‘டபுள் மாஸ்க்’ கொரோனாவில் இருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்குமா?

இரண்டு மாஸ்க் அணிந்து சென்றால் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியுமா என்ற பேச்சுகளும், ஆராய்ச்சிகளும் தொடங்கியுள்ளன.

Health News in Tamil : கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கத் தொடங்கியுள்ளது. முதல் அலையை காட்டிலும் தொற்றுப் பரவும் வீதமானது பல மடங்கில் இருந்து வருகிறது. எதிர்பார்க்கப்படாத எண்ணிக்கையில் மரணங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், கடந்து ஆண்டு கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் இருந்து வந்த அச்ச உணர்வை விட, பல மடங்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். அச்சத்தின் காரணமாக, தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறாமல் இருக்க மருத்துவ நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்லும் போது, கட்டாயம் முகக் கவசங்களை அணிய வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஒரு மாஸ்க் அணிவதை விட, இரண்டு மாஸ்க் அணிந்து சென்றால் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியுமா என்ற பேச்சுகளும், ஆராய்ச்சிகளும் தொடங்கியுள்ளன.

கொரோனா தொற்று அதிகரித்தும் வரும் வேளையில், பெரும்பாலானோர் வெளியில் செல்லும் போது தங்களை தற்காத்துக் கொள்ள இரட்டை மாஸ்குகள் அணிந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இது குறித்து, மும்பை ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் கீர்த்தி சப்னிஸ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், ‘டபுள் மாஸ்கிங்’ எனப்படும் இரண்டு முகக் கவசங்களை பயன்படுத்துவது, கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவுகிறது. டபுள் மாஸ்க் அணிவதன் மூலம், தொற்றுக்கு உள்ளானோர் வைரஸ் பரப்பும் விகிதத்தை குறைக்கிறது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சி.டி.சி. ஆய்வின்படி, டபுள் மாஸ்க் அணிவதால் கொரோனா தொற்று பரவலை 96.4% குறைக்கலாம் என தெரிவித்துள்ளதாக கூறினார்.

“ஒரு நபர் ஒரு முகமூடியை மற்றொன்றுக்கு மேல் அணியும்போது, ​​அது‘ இரட்டை மறைத்தல் ’என்று அழைக்கப்படுகிறது. வெளிப்புற முகமூடி உள் முகமூடியின் விளிம்புகளுக்கு மென்மையான அழுத்தத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் சிறந்த முத்திரையை உருவாக்கலாம். வைரஸ் சுவாச துளிகளால் பரவுவதால், முகமூடியின் அடுக்குகள் அதன் வடிகட்டலை அதிகரிக்க உதவும், மேலும் உங்களைச் சுற்றியுள்ள ஒருவர் தும்மினால் அல்லது இருமல் வந்தால் பாதுகாப்பையும் அளிக்கும் ”என்று மருத்துவர் விளக்குகிறார்.

இரட்டை உள் முகக் கவசத்தின் விளிம்புகளுக்கு மென்மையான அழுத்தத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் சிறந்த முத்திரையை உருவாக்கலாம். வைரஸ் சுவாச துளிகளால் பரவுவதால், முகமூடியின் அடுக்குகள் அதன் வடிகட்டலை அதிகரிக்க உதவும், மேலும் உங்களைச் சுற்றியுள்ள ஒருவர் தும்மினால் அல்லது இருமல் வந்தால் பாதுகாப்பையும் அளிக்கும் ”என்று மருத்துவர் விளக்குகிறார். மேலும், இரட்டை முகக் கவசங்களை பயன்படுத்தும் போது, முதலாவதாக அணியும் முகக் கவசம் மென்மையானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

டபுள் மாஸ்க் எப்போது அணியலாம்?

விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் என மக்கள் கூட்ட நெரிசலாக காணப்படும் இடங்களில் டபுள் மாஸ்கை அணியலாம்.

ஒரு சர்ஜிக்கல் மாஸ்க்கின் மீது, துணி மாஸ்கை அணியலாம். அல்லது, இரண்டும் துணியினாலான மாஸ்குகளையே அணியலாம்.

கூட்ட நெரிசலான இடங்களில் முகக் கவசம் அணிந்திருந்தாலும், ஷீல்டு போன்றவற்றை பயன்படுத்தியும் தொற்று பரவல் ஏற்படுத்தாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

N95 ரக மாஸ்குகளை பயன்படுத்தினால், டபுஸ் மாஸ்க் அணிவதை தவிர்க்கலாம்.

மாஸ்க் அணியும் போது செய்ய வேண்டியவை :

துணியினால் ஆன மாஸ்கை தினமும் சுடு தண்ணீரில் கழுவ வேண்டும்.

மாஸ்க் அணியும் போது சரியான முறையில் அணியுங்கள். மூக்கு, வாய், கன்னம் ஆகியவை மூடியிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

குடும்ப உறுப்பினர்களிடம் மாஸ்க் பகிர்ந்துக் கொள்வதை தவிர்க்கவும்.

மாஸ்கை கலட்டியப் பின், கைகளில் சானிட்டைஸர்களை பயன்படுத்துங்கள்.

பயன்படுத்திய மாஸ்குகளை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துங்கள்.

குறிப்பிட்ட கால இடைவெளியில், மாஸ்கை மாற்றி பயன்படுத்துங்கள்.

முகக் கவசங்களை கழட்டிய பின், சமூக இடைவெளியைப் பயன்படுத்தி மீண்டும் அவற்றை அணிந்துக் கொள்ளுங்கள்.

மாஸ்க் அணியும் போது செய்யக் கூடாதவை :

மாஸ்கை சரியாக அணியாமக் கழுத்து அல்லது கன்னங்களில் படுமாறு அணிய வேண்டாம்.

ஈரமான மாஸ்கை அணிய வேண்டாம்.

அணிந்த மாஸ்கை அடிக்கடி தொட வேண்டாம்.

பேசும் போது மாஸ்கை அகற்ற வேண்டாம்.

தும்ம வேண்டியிருந்தால் மாஸ்கை அகற்ற வேண்டாம்.

இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைக்கு மாஸ்கை அணிவிக்க வேண்டாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Can double masking give you better protection find out tamil

Next Story
தடுப்பூசி தேவை; மாநில அரசுகளை கைகழுவிய மத்திய அரசு: எதிர்க்கட்சி மாநிலங்கள் கண்டனம்Don’t wash hands of vaccine, what about the poor: Opp states to Centre
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com