பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே சீருடை அமலில் இருக்கையில், அங்கு மதம் சார்ந்த உடையை பின்பற்றுவது சரியாக இருக்குமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
ஹிசாப் அணிவது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது. ” நீங்கள் மதம் சார்பான எந்த நடைமுறையும் பின்பற்றலாம். ஆனால் சீருடை இருக்கும் பள்ளியில் இதை நீங்கள் செய்ய முடியுமா ?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர், ஹிஜாப் மற்றும் துப்பட்டா ஒன்றுதான் என்ற கருத்தை முன்வைத்தார். ஆனால் அப்போது குறுக்கிட்ட நீதிபதி குப்தா ” நீங்கள் துப்பட்டாவையும், ஹிஜாபையும் ஒன்று என்று கூறுவது தவறு. துப்பட்டா தோள்களை மறைக்கும்” என்று கூறினார்.
ஆனால் மூத்த வழக்கறிஞர் கூறுகையில் மூத்தவர்களுக்கு முன்பு பெண்கள் தங்கள் மரியாதையை வெளிப்படுத்த துப்பட்டாவால் தலையை மூடுவார்கள் என்று கூறினார். ஆனால் இதற்கு நீதிபதி குப்தா “ பஞ்சாபில் இது ஒரு கலாச்சார வழிமுறை இல்லை. குருத்துவாருக்கு வழிபட செல்லும்போது பெண்கள் துப்பட்டாவை, தலையில் போட்டுக்கொள்வார்கள்” என்று குறுக்கிட்டார்.
இந்த வழக்கில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் ராஜிவ் தேவன் கூறுகையில் “ ஹிசாப்பை பயன்படுத்துவது, ஒரு முக்கியமான மத ரீதியான வெளிப்பாடு என்று சட்டத்தில் கூறவில்லையே “ என்று விளக்கினார்.
நிதிபதி குப்தா குறுக்கிட்டு “ ஹிஜாப் அணிவது முக்கியமான மத ரீதியான வெளிப்பாடா என்பது முக்கியமில்லை. ஆனால் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் இது சரியாக இருக்குமா என்றுதான் கேட்ட வேண்டும். சட்டத்தில் இது ஒரு மதச்சார்பற்ற நாடு என்றுதான் உள்ளது என்று கூறினார்.
வழக்கறிஞர் தேவன் கூறுகையில், நீதிபதிகள் குங்குமம் வைத்து கொண்டு வருகிறார்கள் என்றும் சீனியர் நீதிபதி இடம்பெறும் புகைபடத்தில் அவர் தலையில் தலைபாகையுடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
தலைபாகை என்பது அரச மரியாதை அல்லது அக்காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட வந்த சிறப்பு அந்தஸ்து. இதை மத ரீதியான வழிமுறை என்று கூறயிலாது என்று நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில் கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று குறிப்பிடப்படவில்லை என்றும். எல்லா அரசு கல்வி நிறுவனங்களுக்கும், சீருடை கட்டாயம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. விதி 11 இதைத்தான் கூறுகிறது என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் கூறினார். இந்நிலையில் இதுதொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையன்று மேலும் தொடர உள்ளது.
கடந்த மார்ச் 15ம் தேதி ஹிஜாப் அணிவது தொடர்பாக உடுப்பியில் உள்ள பல்கலைகழகத்தில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.