அமித்ஷா மீது குற்றச்சாட்டு: கனடா தூதருக்கு இந்தியா சம்மன்

கனடா சீக்கிய பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்த நிலையில் இரு நாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.

கனடா சீக்கிய பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்த நிலையில் இரு நாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amith shah

அமித்ஷா மீதான குற்றச்சாட்டு: இந்தியா சம்மன்

கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டதற்கு மத்திய அமைக்கர் அமித் ஷா மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும் 

‘Absurd, baseless’: India lodges protest on allegations against Amit Shah, summons Canadian High Commission official

இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர். கனடாவில் சிக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அமைச்சர்  அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியது.    

Advertisment
Advertisements

இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா ஆரம்பம் முதலே குற்றம் சாட்டி வருகிறது. கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறினார். ஆதாரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் ஆனால் அவற்றை இந்தியா ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதாகவும் இதனால் கனடா தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர். 

India Amit Shah

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: