Advertisment

உச்ச சுற்றுலா சீசனில் கனடா விசா முடக்கம்; பெரிய அளவிலான கேன்சல், அஞ்சும் டிராவல் ஆபரேட்டர்கள்

2019-20க்குப் பிறகு இது ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது

author-image
WebDesk
New Update
Canada visa.

Canada visa freeze clouds Indian tourism sector in peak season

கனட குடிமக்களுக்கான விசாக்களை இடை நிறுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கை – இந்தியாவில் உச்ச சுற்றுலா சீசனை பாதிக்கலாம், உள்நாட்டில் உள்ள டிராவல் ஆபரேட்டர்கள், பெரிய அளவிலான ரத்துசெய்தலுக்குத் தயாராகி, ஒட்டுமொத்த உணர்வின் மீது எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.

Advertisment

சுற்றுலா அமைச்சகம் வழங்கிய புள்ளிவிவரங்கள், டிசம்பர் மாதம் சுற்றுலாப் பருவத்தின் உச்சமாக இருக்கும். அமைச்சகத்தின் 2021 தரவுகளின்படி, இந்தியாவிற்கு வருகை தந்த மொத்த கனேடிய சுற்றுலாப் பயணிகளில் 24 சதவீதத்திற்கும் அதிகமானோர் டிசம்பரில் வந்துள்ளனர், மே மாதத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் இங்கு பயணித்துள்ளனர்.

இந்திய டூர் ஆபரேட்டர்கள் சங்கத்தின் (IATO) தலைவர் ராஜீவ் மெஹ்ரா, ’கனடா இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆதார சந்தையாகும். எங்களிடம் சுற்றுலாப் பயணிகள் உள்ளனர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்கிறார்கள், 2019-20க்குப் பிறகு இது ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது,’ என்றார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை மற்றும் இந்தியாவை கொலையுடன் தொடர்புபடுத்தும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கள் தொடர்ந்து, கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கனேடியர்களுக்கான விசா சேவையையும் இந்தியா கடந்த மாதம் நிறுத்தியது.

இந்த நிதியாண்டில் அவர்கள் எதிர்பார்த்ததை விட இது 30-40 சதவீதம் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று இந்திய டூர் ஆபரேட்டர்கள் சங்கம் கணித்துள்ளது.

டிசம்பரில் இருந்து பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் பாதிக்கப்படுவார்கள், என்று மெஹ்ரா கூறுகிறார்.. விருந்தோம்பல் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளும் - அது ஹோட்டல்கள், ஈவண்ட் பிளானர்ஸ், மேரேஜ் பிளானர்ஸ் (கனேடிய வம்சாவளியினர் பெரும்பாலும் இந்தியாவில் திருமணங்களை ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள்), சொகுசு கார் வாடகை நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

FAITH இன் நிர்வாகக் குழு உறுப்பினர் அஜய் பிரகாஷ் கூறுகையில், ’கனடாவுடன் உள்வரும் சீசன் தொடங்கும் போதுதான் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் அது தொடர்ந்தால், அது அனைத்துப் பிரிவுகளையும் பாதிக்கும். மற்ற முக்கியமான சந்தைகளில் உணர்வு பாதிக்கப்படாது என்று நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் அது பேரழிவு தரக்கூடிய விளைவை ஏற்படுத்தக்கூடும், என்று அவர் கூறினார்.

Read in English: Canada visa freeze clouds Indian tourism sector in peak season

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Canada
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment