மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டுகள் "கவலை தரக்கூடியவை" என்று அமெரிக்கா புதன்கிழமை கூறியது, இந்த விவகாரம் குறித்து கனடாவிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Canadian allegations against Amit Shah ‘concerning’, says US
"கனடா அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் கவலை தரக்கூடியவை, மேலும் அந்த குற்றச்சாட்டுகள் குறித்து கனடா அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்துவோம்" என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தனது தினசரி செய்தி மாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் நதாலி ட்ரூயின் மற்றும் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் ஆகியோர் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைக்கும் திட்டத்தின் பின்னணியில் அமித் ஷா இருந்ததாக குற்றம் சாட்டி, இதுதொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு தகவல்களை கசிய விட்டதாக கனேடிய பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தினர்.
ஒரு கேள்விக்கு பதிலளித்த மோரிசன், தி வாஷிங்டன் போஸ்ட்டிற்கு அமித் ஷாவின் பெயரை "உறுதிப்படுத்தியதாக" கூறினார். “பத்திரிகையாளர் என்னை அழைத்து அந்த நபரா என்று கேட்டார். அந்த நபர் தான் என்பதை உறுதி செய்தேன்,'' என்று மோரிசன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“