Advertisment

உங்க வீட்டுக்கு அருகே கேன்சர் தெரபி: மத்திய பட்ஜெட்டில் இதை கவனித்தீர்களா? நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு

மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான பகல்நேர பராமரிப்பு மையங்களை நிறுவுவதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

author-image
WebDesk
New Update
Cancer centre

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சனிக்கிழமையன்று நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பில் ஒரு பெரிய மேம்படுத்தலை தெரிவித்தார். அதன்படி, மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான பகல்நேர பராமரிப்பு மையங்களை நிறுவுவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த முயற்சியானது மாவட்ட அளவில் அத்தியாவசிய புற்றுநோய் சிகிச்சைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பெருநகரங்களில் உள்ள பெரிய மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் அதிக நோயாளிகளின் சுமையை எளிதாக்குகிறது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Cancer therapy comes closer to people’s homes: How day care centres at district hospitals will change cancer care

 

Advertisment
Advertisement

கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், குறைந்தபட்சம் 759 மாவட்ட மருத்துவமனைகளின் பரந்த நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது இந்தியா . அவை மாவட்ட அளவில் மூன்றாம் நிலை சுகாதாரத்திற்கான முக்கியமான அணுகல் புள்ளிகளாக செயல்படுகின்றன. "அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல்நேரப் புற்றுநோய் மையங்களை நிறுவ எங்கள் அரசாங்கம் உதவும். 2025-26ல் 200 மையங்கள் அமைக்கப்படும்" நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது ஏன் குறிப்பிடத்தக்கது?

இந்த முடிவு குறிப்பிடத்தக்க பொது சுகாதார தாக்கங்களை கொண்டுள்ளது. முதலாவதாக, இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. 2022 ஆம் ஆண்டிற்கான குளோபல் கேன்சர் அப்சர்வேட்டரி தரவுகளின்படி, நுரையீரல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்கள் ஆண்களிடையே அதிகமாக காணப்படுகிறது.  இரண்டாவதாக, புற்றுநோய் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த பகல்நேரப் பராமரிப்பு மையங்கள், பொதுவாக கீமோதெரபியை வழங்குகின்றன. மேலும், அத்தியாவசிய மருந்துகள்  பயாப்ஸிகள் போன்ற சிறிய செயல்முறைகள் மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும். கிராமப்புற மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மையங்களை அமைப்பதில் தற்போது உள்ள சவால்கள் என்ன?

புற்றுநோய் சிகிச்சையை மக்களின் வீடுகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை நிபுணர்கள் வரவேற்றாலும், இந்த மையங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் அவற்றை யார் வழங்குவது என்பது குறித்த தெளிவு இல்லாததை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

"இந்த மையங்களில் வழங்கப்படும் சேவைகள் பற்றிய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே அவற்றின் சாத்தியமான தாக்கத்தை மதிப்பிடுவது கடினம். கீமோதெரபியை வழங்குவதற்கும், பயாப்ஸிகள் போன்ற சிறிய நடைமுறைகளைச் செய்வதற்கும், இரத்த மாற்றங்களை வழங்குவதற்கும், மற்ற அத்தியாவசிய சேவைகளுடன், புற்றுநோய் பகல்நேர பராமரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும்" என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் அபிஷேக் சங்கர் கூறினார்.

திட்டம் எதிர்கொள்ளக்கூடிய முக்கிய சவால்களையும் மருத்துவர் ஷங்கர் எடுத்துரைத்தார். "பல மாவட்ட மருத்துவமனைகள் தற்போது உள்நோயாளிகளுக்கு கூட பயாப்ஸி சேவைகளை வழங்குவதில்லை. உண்மையில், நாட்டில் சில மருத்துவக் கல்லூரிகள் எந்த புற்றுநோய் சிகிச்சையையும் வழங்கவில்லை. அவர்கள் எப்படி பயாப்ஸி அல்லது கீமோதெரபியை ஒரு பகல்நேரப் பராமரிப்பு மையத்தில் வழங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

இதன் நன்மைகள் என்ன?

மார்பக, தலை மற்றும் கழுத்து புற்றுநோய் போன்ற பொதுவான புற்றுநோய்களுக்கான சில கீமோதெரபி சிகிச்சைகள் மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே வழங்கப்படலாம். மும்பை டாட்டா மெமோரியல் சென்டரின் இயக்குநர் டாக்டர் சுதீப் குப்தாவின் கூற்றுப்படி, "கீமோதெரபி பெற 400 கிமீ பயணம் செய்வது நல்ல யோசனையல்ல. மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து வரும் வயதான நோயாளிகளுக்கும் இது எளிதாக இருக்கும். உதாரணமாக, பரேலில் உள்ள டாட்டா மெமோரியல் மருத்துவமனையில், இரு பராமரிப்பு மையங்களும் சேர்ந்து தினமும் சுமார் 400–500 கீமோதெரபி அமர்வுகளை நடத்துகின்றன. கீமோதெரபி சிகிச்சையை வழங்குவதற்கு மாவட்ட மருத்துவமனைகள் பொருத்தமான இடம்" என்றார்.

அரசின் பிற முக்கிய அறிவிப்புகள் என்ன?

தற்போதைய பட்ஜெட்டில் புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. புற்றுநோய் மருந்துகள் உட்பட பல உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அல்லது குறைப்புகளை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புற்றுநோய், அரிதான நோய்கள் மற்றும் பிற கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், மேலும் ஆறு மருந்துகளுக்கு 5% குறைக்கப்பட்ட சலுகை வரி விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். கூடுதலாக, இந்த மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான மொத்த மருந்து கொள்முதல் சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் அல்லது சலுகை விலையில் கிடைக்கும். 37 புதிய மருந்துகள் மற்றும் 13 நோயாளிகளுக்கான உதவித் திட்டங்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். 

- அனோன்னா தத், அனுராதா

Union Budget Cancer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment