புற்றுநோயை இனி ஆரம்பநிலையிலேயே கண்டறியலாம் : மருத்துவத்துறையில் புரட்சி

Cancer detection at early stage : புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான புதிய ரத்தப்பரிசோதனையை இந்திய விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

By: Updated: February 14, 2020, 05:03:28 PM

புற்றுநோய் மூலக்கூறு வசதியைப்பயன்படுத்தி, ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும், கொத்தான கட்டிகளை உருவாக்கக்கூடிய செல்களை கண்டறியும் புதிய முறையை தட்டார் கேன்சர் மரபணு மைய விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான புதிய ரத்தப்பரிசோதனையை இந்திய விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

புற்றுநோய் மூலக்கூறு வசதியைப்பயன்படுத்தி, ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும், கொத்தான கட்டிகளை உருவாக்கக்கூடிய செல்களை கண்டறியும் புதிய முறையை தட்டார் கேன்சர் மரபணு மைய விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். ‘Circulating ensembles of tumor-associated cells எனப்படும் கட்டிகளை உருவாக்குவதில் தொடர்புடைய ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் செல்களின் தொகுப்பமைவு, புதிய முறையான வலுவான புற்றுநோய் ஆராய்ச்சியில் ஒரு மைல் என்ற ஆராய்ச்சிக்கட்டுரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச புற்றுநோய் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

அதன் முதன்மை எழுத்தாளர் மற்றும் தட்டார் கேன்சர் மரபணு மைய இயக்குனர், டாக்டர் தாதாசாகேப் அகோல்கர் கூறுகையில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை வைத்து, ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் கட்டிகளை ஏற்படுத்தக்கூடிய செல்களின் நோய்த்தாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்வது இதுவே முதல்முறையாகும். புற்றுநோய் ஆராய்ச்சியில் தனித்தன்மையான புதிய முயற்சிகளை உருவாக்குவதற்காக செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில், வணிக பயன்பாட்டு வரும் என்று கடந்த செவ்வாய்கிழமை கூறப்பட்டது. தட்டார் புற்றுநோய் மரபணு மைய இயக்குனர் மற்றும் சேர்மன் ராஜன் தட்டார், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது முக்கியமானதாகும். ஆனால், போதிய பரிசோதனை வசதிகள் மற்றும் திறனும் இல்லாததால் அது பெரிய சவாலாகவே உள்ளது. புற்றுநோய் கண்டறிய உள்ள பரிசோதனைகள் விலை உயர்ந்ததாக உள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் புற்றுநோய் பரிசோதனைகளான மேமோகிராம் மற்றும் சிடி ஸ்கேன்களில் கதிர்வீச்சு ஆபத்து உள்ளது. கொலனோஸ்கோப்பி போன்ற பரிசோதனைகள் வலிமிக்கதாக உள்ளன. ரத்தப்பரிசோதனைகள் குறிப்பிட்டுக்கூறும்படியாக இல்லை. திசுக்களில் செய்யப்படும் பயாப்ஸியில் அறுவைசிகிச்சையில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் உள்ளன. இந்த புதுமையான, ரத்தம் தொடர்பான பரிசோதனை மூலம் துளையிட்டு செய்யப்படும் பயாப்ஸிக்கான தேவைகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கூறினார்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Cancer detection blood test for cancer indian express news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X