வழக்கறிஞரை சந்திக்க அனுமதி மறுப்பு: சிறைவாசி வழக்கில் ஐகோர்ட் காட்டமான கேள்வி

வீடியோ கான்ஃபரன்சிங் இணைப்பு குறித்து ஒரு நாள் முன்பே சிறை அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பவேண்டியது ஆலோசகர்கள்தான் என்றும் குறிப்பிட்டார்கள்

By: Updated: September 16, 2020, 03:01:28 PM

Sofi Ahsan

ஒருவரைச் சிறையில் அடைத்து அவரிடம் உங்கள் வழக்கறிஞரைச் சந்திக்க முடியாது என்று கூறமுடியாது என ஷிஃபா உர் ரஹ்மான் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம், திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

ரஹ்மானுக்கும் அவருடைய சட்ட ஆலோசகருக்கும் இடையில் ஓர் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கான கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு கடந்த ஜூலை மாதம் உள்ளூர் நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. எனினும் ரஹ்மானின் வழக்கறிஞருக்கு அணுகல் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரிக்கப்பட்டது.

திகார் சிறை தரப்பில், கடந்த செவ்வாய்க்கிழமை, ஜாமியா மிலியா இஸ்லாமியா சங்கத்தின் தலைவர் ஷிஃபா உர் ரஹ்மான் தனது வழக்கறிஞருடன் வீடியோ கலந்துரையாடலில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. அவருக்காக வழங்கப்படும் ஆலோசனை வாய்ப்புகளைப் புறக்கணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. திகார் சிறை தரப்பின் இந்த அறிக்கைக்கான ஆதாரங்களை திகார் சிறை அதிகாரிகளிடம் கேட்டது தில்லி உயர்நீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து, “இந்தியாவில் நீங்கள் யாரைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து சிறையில் அடைத்து, உங்கள் வழக்கறிஞரைக் கூட நீங்கள் சந்திக்க முடியாது என்று அவரிடம் சொல்ல முடியாது” என்று நீதிபதி விபூ பக்ரு குறிப்பிட்டார். CAA-விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதற்காக ரஹ்மான் மற்றும் மேலும் சிலருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட UAPA வழக்கை விசாரிக்க டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் குறித்து ரஹ்மான் அளித்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது.

ரஹ்மானுக்கும் அவருடைய ஆலோசகருக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கையைப் பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கடந்த ஜூலை மாதம் உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ரஹ்மானின் வழக்கறிஞர்களுக்கு அணுகல் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரச்சனைகள் தொடர்பாக எழுதப்பட்ட மனுவில் இதுவும் குறிப்பிடப்பட்ட ஒன்று. ரஹ்மான் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் அமித் பல்லா, வழக்கறிஞர் இல்லாத விசாரணை சரியான விசாரணை அல்ல என்று வாதிட்டார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இந்நிலையில், தன்னுடைய வழக்கறிஞரைச் சந்திக்க முடியாது என்று ரஹ்மானிடம் கூறப்படவில்லை என்று சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, “குறிப்பிடப்பட்டுள்ள நபர் தன்னுடைய வழக்கறிஞரைச் சந்திப்பதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நீங்கள் விரக்தியடையச் செய்துள்ளீர்கள்” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக அனைத்து ஆவணங்களையும் முறையாகப் பதிவு செய்யுமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 16 முறை ரஹ்மான் தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் தொலைப்பேசியில் தொடர்புகொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகச் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், ரஹ்மான் தன் குடும்பத்தினரோடு தொலைப்பேசியில் தொடர்புகொண்ட அழைப்புகளின் பட்டியலையும் இணைத்துள்ளனர். ஜூலை 21 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் வீடியோ கான்பரன்சிங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, முதல் சந்தர்ப்பத்தில் ரஹ்மானின் உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் அவர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார் எனவும், இரண்டாவது வாய்ப்பின்போது இணைய இணைப்பில் தோல்வி ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதிகாரிகளின் இந்நிலைப்பாட்டிற்குப் பதிலளிக்கும் விதமாக, பலமுறை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டபோதிலும் வீடியோ சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரஹ்மானின் ஆலோசகர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜூலை 12 மற்றும் ஆகஸ்ட் 8 ஆகிய தினங்களின் சந்திப்புகள் குறித்து தனக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பல்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், வீடியோ கான்ஃபரன்சிங் இணைப்பு குறித்து ஒரு நாள் முன்பே சிறை அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பவேண்டியது ஆலோசகர்கள்தான் என்றும் குறிப்பிட்டார். செப்டம்பர் 11 அன்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி வீடியோ இணைப்பில் தயார் நிலையிலிருந்தோம். ஆனால், சிறையிலிருந்து யாரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார் பல்லா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Cant put someone in jail and say you cannot meet your lawyer hc raps tihar on jamia alumni claim

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X