திசையில்லா பாதையில் காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது என்பதை சுட்டிகாட்டி அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு டி.வி விவாத நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர். தற்போது காங்கிரஸ்யின் பல்வேறு நிலைபாடுகளில் உடன்பாடு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ எந்த திசையில் செல்ல வேண்டும் என்பது காங்கிர கட்சிக்கு தெரியவில்லை. சனாதனத்துக்கு எதிரான கருத்துக்களை கூறவோ, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்பவர்களை விமர்சிக்க முடியாது. இதனால் அனைத்து பதவிகளில் இருந்து விலகுகிறேன்.
கட்சி அதன் அடிப்படைக் கொள்ளைகயில் இருந்து தவறான வழிக்கு சென்றுவிட்டது. ஒரு பக்கம் சாதிவாரி கண்கெடுப்புக்கு ஆதரவு அளித்துவிட்டு, மறுபக்கம் இந்து சமூகத்தை கட்சி எதிர்க்கிறது. இது மாதிரியான கொள்கைகள் கட்சியைப் பற்றி மக்கள் மத்தியில் தவரான பார்வையை விதைக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு மதத்திற்கு மட்டுமே ஆதரவு அளிப்பது போன்ற சிந்தனையை மக்களுக்கு வழங்கிறது. இது கட்சியின் அடிப்படை கொள்கைக்கே எதிரானது.
இன்று பொருளாதாரத்தில் தாரளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல் இருக்கின்றன. இதற்கு உலக நாடுகள் அங்கீகாரம் கொடுத்துள்ளன. நம் நாட்டில் தொழில் செய்து பணம் சம்பாதிப்பது தவறா?
நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது எனது இலக்கு என்னுடைய திறமையை பொருளாதார விவகாரங்களின் மீது நாட்டு நலன் சார்ந்து செலுத்த வேண்டும் என்பதாக இருந்தது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட, பொருளாதாரப் பார்வை கொண்ட தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கலாம். ஆனால் இதற்கான முயற்சிகளை கட்சி அளவில் எடுக்கவில்லை “ என்று அவர் கூறினார்.
கவுரவ் வல்லப் உதய்பூர் சட்டமன்ற தொகுதியில் 2023, ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இவர் 32,000 ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“