கோழிக்கோடு விபத்து : மரணம் அடைந்த விமானி தீபக் சதே யார்?

ஓய்வு பெற்ற அவர் ஏர் இந்தியாவில் இணைந்து 310 ரக பெரிய விமானங்களை இயக்கி வந்தார். பிறகு போயிங் 727 ரக விமானங்களை அவர் இயக்கி வந்தார்.

Captain Sathe, ex IAF pilot, who died in tragic kozhikode plane crash

Captain Sathe, ex IAF pilot, who died in tragic kozhikode plane crash : 07ம் தேதி இரவு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுதளத்தில் இருந்து நழுவி அருகில் இருக்கும் பள்ளத்தில் விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. 180 பயணிகளுடன் வந்த அந்த விமானம் பள்ளத்தில் இரண்டாக பிளந்ததால் பயணிகள் பலரும் காயம் அடைந்தனர். விமானத்தை ஓட்டிய பயணி தீபக் சாதே மரணம் அடைந்தார்.

மேலும் படிக்க : சவாலான ஓடுதளம்… எதனால் ஏற்பட்டது கோழிக்கோடு விமான விபத்து?

மழையின் காரணமாக ஓடுதளம் நீரால் சூழப்பட்டிருந்தது. எனவே ப்ரேக்கை முழுதாக பிரயோகிக்காமல் அதி வேகத்தில் விமானம் இயக்கப்பட்டதால் இந்த விமானம் விபத்திற்கு ஆளானது. அந்த பகுதியில் வசித்து வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் பெரும் இழப்புகள் தவிர்க்கப்பட்டது.

யார் இந்த விமானி?

தேசிய பாதுகாப்பு அக்காதெமியில் (National Defence Academy)-யில் படித்த அவர் ராணுவத்தில் இணைந்தார். இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றிய அவர் தன்னுடைய ஓய்விற்கு பிறகு பயணிகள் விமானத்தின் விமானியாக பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினார். மும்பையை சேர்ந்த சதே  சிறந்த வீரருக்கான Sword of Honour என்ற தங்கப் பதக்கத்தை வென்ற சதே 1981ம் ஆண்டு படித்து முடித்து அக்காடெமியில் இருந்து வெளியேறி இந்திய விமான நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.

10000 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்களை இயக்கி சாதனை புரிந்த சதே இதே கொச்சி விமான நிலையத்தில் 27 முறைக்கும் மேலாக விமானங்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளார். 22 ஆண்டுகளாக சதே போர் விமானங்களை இயக்கி வந்தார்.  2003ம் ஆண்டு இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஏர் இந்தியாவில் இணைந்து 310 ரக பெரிய விமானங்களை இயக்கி வந்தார். பிறகு போயிங் 727 ரக விமானங்களை அவர் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம், கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியை ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக துபாயில் இருந்து 180 பயணிகளுடன் வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Captain sathe ex iaf pilot who died in tragic kozhikode plane crash

Next Story
ரூ. 225-க்கு கொரோனா மருந்து… சீரம் நிறுவனத்துடன் பில்கேட்ஸ் அறக்கட்டளை ஒப்பந்தம்!serum institute will introduce coronavirus vaccine dose at rs 225 in India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com