இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷைரில் என்ற இடத்தில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த 32 வயதான இந்திய மாணவர் சிரஞ்சீவி பங்குலூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் இருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் மற்றும் ஓட்டுநர் என மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக லெய்செஸ்டர்ஷைர் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து லெய்செஸ்டர்ஷைர் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிரஞ்சீவி பங்குலூரி, சாம்பல் நிற மஸ்டா 3 தமுரா காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
Indian student from Andhra Pradesh killed, 4 others injured in UK car crash
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய 27 வயதுடைய மற்றொரு நபரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்து விடுவிக்கப்பட்டார்.
போலீசார் மேலும் கூறுகையில், "லெய்செஸ்டரைச் சேர்ந்த பங்குலூரி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் வாகனத்தில் இருந்த மற்ற மூன்று பயணிகள், ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் மற்றும் ஓட்டுநர் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரண்டு ஆண் பயணிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“