அண்ணா நகர் 2-வது தெருவில் உள்ள தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருபவர் சுந்தரமூர்த்தி. கடந்த 14-ம் தேதி பிற்பகல் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு காரில் வந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தாமரைச்செல்வனுக்கும், செக்யூரிட்டி சுந்தரமூர்த்திக்கும் காரை நிறுத்துவதில் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் சுந்தரமூர்த்தியை, தாமரைச்செல்வன் தாக்கியபோது தவறி விழுந்ததில், காலில் காயமடைந்த சுந்தரமூர்த்தி அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் 15-ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்வதாக, த.வா.க., மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமையிலான நிர்வாகிகள் சீனியர் எஸ்.பி.,யை சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து, இருதரப்பு புகாரின்பேரில், தாமரைச்செல்வன் மீதும் மற்றும் சுந்தரமூர்த்தி மற்றும் தனியார் இன்டர்நெட் நிறுவன ஊழியர்கள் சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி