கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, ஐந்து மாதங்களுக்கு பிறகு ஒமிக்ரான் மாறுபாடால் பல மாநிலங்களில் உயர்ந்துள்ள நிலையில், கூடுதல் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய நிலையில், நோய் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதை கண்டறியும் அளவீடான R மதிப்பு, பல மாநிலங்களில் 1 எண்ணிக்கை கடந்துள்ளதாக காட்டுகிறது.
ஒமிக்ரான் அச்சுறுத்தல் முழுமையாக ஆரம்பிக்காத நிலையிலேயே, இந்த கூடுதல் தடுப்பூசி செலுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளிலும், ஒமிக்ரான் பரவ தொடங்குவதற்கு முன்பே, தகுதியான வயது வந்தோரில் பெரும்பாலோர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவுடன், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கின.
தற்போது இந்தியாவும் அதே கட்டத்தில் தான் உள்ளன. தகுதியுடைய மக்கள் தொகையில் 60 விழுக்காடு பேர் முழுமையாக தடுப்பூசியயும், 90 விழுக்காட்டிற்கு அதிகமானோர் முதல் டோஸூம் செலுத்தியுள்ளனர்.
அதே சமயம், இரண்டு டோஸால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு எட்டு அல்லது ஒன்பது மாதங்களுக்கு பிறகு குறைவது ஆதாராத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் தடுப்பூசி மூலம் நோய் தீவிரத்தன்மை மற்றும் இறப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்திட முடியும். ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இரண்டாம் டோஸ் பெற்ற முதியவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதற்கான அறிகுறிகளை காட்டுகின்றன.
சென்னையின் கணித அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவின் சமீபத்திய தரவு, ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரால் தொற்று பரவும் நபர்களின் சராசரி எண்ணிக்கையின் மதிப்பீடான R-மதிப்பு தப்போது மகாராஷ்டிராவில் 1 க்கும் அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்த வரிசையில் டெல்லியும் சமீபத்தில் இணைந்துள்ளது. தற்போது, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவும் இணைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒட்டுமொத்த இந்தியாவைப் பொறுத்தவரை, R மதிப்பு இன்னும் 1 ஐ விடக் குறைவாக உள்ளது. ஆனால் அது அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மரபணு பரிசோதனை செய்தால் மட்டும் ஒமிக்ரான் மாறுபாட்டை கண்டறிய முடியும் என்பதால், மக்கள்தொகையில் ஒமிக்ரான் மாறுபாட்டின் உண்மையான பரவல் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
கடந்த நான்கு நாள்களாக, இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1.7 லட்சமாக உள்ளது. இதேபோல், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொரோனா தொற்று அதிகளவில் பதிவாகிறது.
ஜனவரியின் நடுப்பகுதி அல்லது இறுதிக்குள் இதேபோன்ற எழுச்சியை இந்தியாவில் காணக்கூடும். அப்போது, கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படுவதால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்.
சிறார்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதற்கும் இதான் காரணம், ஏனென்றால் ஐரோப்பா நாடுகளின் தரவுகளை பார்கையில், ஒமிக்ரான் தடுப்பூசி போடாத இளம் வயதினரை அதிகளவில் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
உண்மையில், ஸ்பெயின் அல்லது இத்தாலி போன்ற சில நாடுகளில், இளையவர்களில் ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவலானது பரந்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட இருமடங்காகும். இந்தியாவில் கூட, ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டவர்களில் கணிசமானோர் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடவில்லை.
எனவே, தற்போது ஜனவரி 3 முதல் 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதும், ஜனவரி 10க்கு மேல் முதியோர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது பணியும் சரியான நேரத்தில் நடைபெறவுள்ளது. கால தாமதம் ஆகவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil