Advertisment

முடிவுரை இல்லாத 2ஜி வழக்கு! மேல்முறையீட்டிற்கு தயார்!

செப்டம்பர் 24, 2007 அன்று, தகவல் தொலைத் தொடர்புத் துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில்,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
முடிவுரை இல்லாத 2ஜி வழக்கு! மேல்முறையீட்டிற்கு தயார்!

2ஜி ஊழல் வழக்கில் கீழ் நீதிமன்றம், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும்படியான தீர்ப்பை அளித்தது. அதவாது, "நான் அவன் இல்லை" என்று ஆ ராஜா மற்றும் கனிமொழி உலகிற்கு எடுத்துரைக்கும் அளவுக்கு குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி தனது தீர்ப்பில், அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சமர்பிக்க தவறிவிட்டார். அதனால் தான் இவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றார். இதனால், மேல்முறையீட்டில் இவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என மத்திய அரசு நம்புகிறது.

Advertisment

கடந்த வியாழனன்று தீர்ப்பு வெளியான தினத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் நீதிமன்றத்தில் வாதாடுகையில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்று சட்டத்தில் உள்ள நடைமுறையின்படிதான் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார். இதில், ராசா எங்குமே தவறு இழைக்கவில்லை. 2001ல் இந்தியா முழுவதும் நடந்த நான்காவது செல்லுலார் லைசன்ஸ் ஏலத்தின் மதிப்பு ரூ.1,658 கோடியாக இருந்தது. அதனால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற நடைமுறை அப்போது செயல்படுத்தப்படவில்லை.

2007ல் டிராய்-ன் தலைமை அதிகாரியாக இருந்த ரிபென்திரா மிஸ்ரா சில அலைவரிசை கொண்ட ஸ்பெக்ட்ரம்களின் ஏலத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தார். பல அலைவரிசைகள் இதில் இடம்பெறவில்லை. அனைத்தும் சமம் என்கிற கொள்கை கடைபிடிக்கப்படவில்லை. பொதுவாக, ஒரு தொழிலில் முதலில் நுழையும் நிறுவனங்களுக்கு, பின்னர் நுழையும் நிறுவனங்களை விட மலிவு விலையில் அனைத்தும் கிடைக்கும். ஆனால், மிஸ்ராவின் கூற்றுப்படி, எண்ணற்ற போட்டிகள் உருவானது. இதனால், முதலில் நுழைந்தவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கவில்லை. எனவே, ஒருமுறை லைசன்ஸ் ஒதுக்கப்பட்டால், அடுத்த மூன்று வருடங்களுக்கு அதனை விற்க முடிவதில்லை.

இந்த திட்டம் அமலில் இருக்கும் போதே, ராஜா மறுவிற்பனை மீதான கட்டுப்பாடுகளை உடைத்தார். இதனை எதிர்த்து மிஸ்ராவும் போராடினார். ஆனால் பயனில்லை. குறிப்பிட்ட அளவிலான ஸ்பெக்ட்ரமே இருக்கும் பொழுது, நிறைய எண்ணிகையிலான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. மொத்தம் 575 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. பிரதமர், நிதியமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் என அனைவரும் மற்ற ஏலத்திற்கு அனுமதி கொடுத்தனர்.

உதாரணமாக, சட்ட அமைச்சர், "இந்த விஷயம் அமைச்சரவையின் அதிகார சபையினரால் பரிசீலிக்க வேண்டும்" என்றார். பிரதமரோ, "முடிந்தால் வெளிப்படைத்தன்மையான ஏலம் நடத்தப்படும்" என்றார். நிதியமைச்சரும் இதையேத்தான் சொன்னார். ஆனால், இவையனைத்தையும் நிராகரித்த ராசா, 122 டெலிகாம்களை அனுமதித்தார். ஏலம் வருங்காலத்தில் நடத்தப்படும் என்றார்.

ஆனால் இப்போது, FCFS நடைமுறையை எல்லாவற்றிற்கும் ஏற்றுக்கொள்கிறோம். செப்டம்பர் 24, 2007 அன்று, தகவல் தொலைத் தொடர்புத் துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில், "புதிதாக அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அக்டோபர் 1, 2007 வரை ஏற்றுக் கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. அன்றைய தேதி வரை மொத்தமாக 167 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் சில, மார்ச் 2006ல் பெறப்பட்ட விண்ணப்பங்களும் அடங்கும். ஆனால், அக்.1 வரை மொத்தமாக 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசாங்கத்திடம் இருந்த ஸ்பெக்ட்ரம் அளவை விட, இது மிக அதிகளவாகும்.

ஜனவரி 10, 2008ல் , தகவல் தொலைத் தொடர்புத் துறை இரண்டு செய்தி அறிவிப்புகளை வெளியிட்டது. முதலாவது அறிக்கையில், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 25 என்று தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் மதியம் 2.30 மணிக்கு வெளியான இரண்டாவது அறிக்கையில், அனைத்து நிறுவனங்களும் தங்களது விண்ணப்ப பணிகளை மாலை 3.30 - 4.30க்குள் முடித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து விசாரித்த போது, சில நிறுவனங்கள் முன்னதாக பணம் செலுத்தி டிடி எடுத்து வைத்திருந்தன. அதன்பின் தேதி மாற்றப்பட்டதால், அவர்களுடைய டிடி தேதியும் மாற்றப்பட்டு மற்ற பணிகளும் முடித்திருக்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தவே அறிக்கைகள் வெளியானதாக கூறப்பட்டது.

தொலைத் தொடர்புத் துறையின் அறிக்கைக்கு ஏற்றார் போல், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், எதிர்பார்த்தது போலவே ராஜா முதலில் வந்த 122 விண்ணப்பங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. உதாரணமாக, மார்ச் 2, 2007ல் விண்ணப்பம் அளித்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் டெலிகான் அலைவரிசையை பெற்றது. ஆனால், ஆகஸ்ட் 2006ம் ஆண்டே அந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

அனுமதி வழங்கப்பட்ட 122 விண்ணப்பங்களில் 85 விண்ணப்பங்கள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படவில்லை. நிறைய சட்ட திட்டங்கள் மீறப்பட்டுள்ளன.

அதாவது, ஒரே குழுவுக்கு சொந்தமான சில நிறுவனங்களின் விஷயங்களில் 2ஜி ஊழலின் சிஏஜி அறிக்கை சொல்வதெனில், அந்த நிறுவனங்கள் டெலிகாம் நிறுவனங்கள் என சொல்லிக் கொண்டு ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை கைப்பற்றின. அதிலும், சில நிறுவனங்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் இறுதி நாட்களைத் தாண்டித் தான் பதிவே செய்திருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், ஒரு நிறுவனம் வெறும் 1 லட்சத்தை மட்டும் கட்டிவிட்டு 150 கோடி கட்டியதாக பொய் சொல்லியிருக்கிறது.

இவையனைத்தும் மேல் முறையீட்டின் போது நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

A Rasa Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment