பணமதிப்பிழப்பு: இந்தியாவின் முதல் கேஷ்லஸ் கிராமத்தில் மீண்டும் நேரடி பணப்பரிவர்த்தனை!

கார்டு பேமெண்ட் முறைக்கு எனது ஆதரவு உண்டு. ஆனால், தினம் ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் கிராமத்தில் கார்டு மெஷினை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

மும்பையின் தானே அருகே உள்ள தசாய் கிரமாத்தைச் சேர்ந்த நிர்மலா பனுஷாலி மளிகைக் கடை வைத்திருக்கிறார். இவர் ரூ.2000 கொடுத்து கார்ட் மூலம் பணம் செலுத்தும் இயந்திரத்தை வாங்கி வந்து தனது கடையில் உபயோகம் செய்து வருகிறார். இந்த இயந்திரத்தை வாங்கியதால் பணம் தான் வீணாகியுள்ளது என புலம்புகிறார்.

6000 மக்கள் வசிக்கும் இந்த கிராமம் தான் நாட்டின் முதல் ‘பணப்பரிவர்த்தனையில்லா கிராமம்’ என பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகி ப்ரமோத் கெய்கர் கூறுகையில், “அப்போது மக்கள் வங்கிகளுக்கு வெளியே காத்துக் கிடந்த சூழ்நிலையில், மாநில அரசு நடத்தும் பரோடா வங்கி, முதற்கட்டமாக 185 பதிவு செய்யப்பட்ட கடைகளில் 40 கடைகளுக்கு ஸ்வைப் மெஷின் வழங்கியது” என்றார். பனுஷாலி போன்றவர்களுக்கு வங்கியில் கணக்கு இல்லாததால், மினிமம் பேலன்ஸ் கொண்டு கரண்ட் அக்கவுன்ட் அவர்களுக்காக திறக்கப்பட்டது.

ஆனால், ஒரு வருடம் கழித்து, ஸ்வைப் மெஷின் உபயோகம் செய்வதில் பெரும் சிக்கல் இருப்பதாக பெரும்பாலான வியாபாரிகள் கூறினர். மோசமான இணையம் மற்றும் அடிக்கடி கரண்ட் கட் ஆவதால், தங்களால் அதனை உபயோகம் செய்ய முடியவில்லை என்றனர்.

பெரும்பாலான வர்த்தகர்கள் ஸ்மார்ட்போன் மூலமாக பண்ப்பரிவத்தனை செய்வதை ஏற்றுக் கொள்வதில்லை. குறிப்பாக, பேடிஎம் மற்றும் பிரதமர் அறிமுகம் செய்த பீம் ஆப்-களையும் உபயோகம் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, இந்தியாவில் விற்பனையாகும் மொபைல்களில் 3-ல் இரண்டு பங்கு 2ஜி வசதி கொண்ட மொபைல் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஜூலை தரவுப்படி, இந்தியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தில் 118 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள லேண்ட்லைன் இணைப்பு மோசமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, உடனடியாக கேஷ்லஸ் கிராமமாக மாறிய தசாய், அனைவரையும் வியப்பிற்குள் ஆழ்த்தியது. 90 சதவீத பணப்பரிவர்த்தனை கேஷ்லஸ்சாக மாறியதாக மற்றொரு மளிகைக் கடை வியாபாரி சுரேஷ் மந்தானே கூறுகிறார். பண நெருக்கடியின் போது அந்த சேவை சிறப்பானதாக இருந்தது. வங்கியில் இரண்டு ஏ.டி.எம். பயன்படுத்தலாம் என்றும் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ததாலும், கேஷ்லஸ் பயன்பாடு குறைந்துவிட்டது. இது இப்போது சுமார் 15 சதவிகிதமாக மட்டுமே உள்ளது” என்றார்.

தொடர்ந்து, பஞ்சாயத்து நிர்வாகி ப்ரமோத் கெய்கர் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் பலரிடம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இருப்பதில்லை. தசாய் கிராமத்தில் உள்ள இரண்டு வங்கிகள் தான், அண்டை கிராமங்களுக்கும் சேவை செய்கின்றன. விஜயா வங்கியில் 11,000 அக்கவுண்ட்களும், தானே வங்கியில் 26,000 அக்கவுண்ட்களும் உள்ளன. ஆனால், இவற்றில் 3000 பேருக்கு மட்டுமே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஷூ கடை உரிமையாளர் சிவாஜி மோரே கூறுகையில், “மக்களிடம் கார்டுகள் இல்லாத போது, நான் ஏன் ஸ்வைப் மெஷின்களை கையில் வைத்துக் கொண்டு அலைய வேண்டும்?. மக்கள் எப்படியிருந்தாலும் பணமாக கொடுக்கப்போகின்றனர்” என்றார்.

மற்றொரு சாலையோர கடை வியாபாரி கூறுகையில், “சிப்ஸ், சாக்லேட், மிட்டாய்கள் போன்றவற்றை வாங்க யாராவது கார்டைத் தருவார்களா? எனக்கு அந்த மெஷின் தேவையில்லை” என்கிறார்.

அதேசமயம், அந்த கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான டெய்லர் யஷ்வந்த் மாத்சே கேஷ்லஸ் முறைக்கு அதரவு தெரிவிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கார்டு பேமெண்ட் முறைக்கு எனது ஆதரவு உண்டு. ஆனால், தினம் ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் கிராமத்தில் கார்டு மெஷினை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும், அவர் கூறுகையில், ஸ்வைப் மெஷின் கொண்டு வியாபாரம் செய்வது என்பது சிறு வணிகர்களுக்கு சாத்தியம் இல்லாத விஷயம். அதனால் தான் அரசாங்கம், மொபைல் வாலட்களையும், ஒருங்கிணைக்கப்பட்ட பணம் செலுத்தும் வழிமுறைகளையும் பயன்படுத்த அறிவுறுத்துகிறது. ஆனால், மக்களுக்கு அது குறித்தான விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. சில கடைகளின் உரிமையாளர்களின் பிள்ளைகள் அவர்களுக்கு பீம் ஆப்-ஐ டவுன்லோட் செய்ய உதவுகின்றனர். ஆனால், இன்னும் பல கிராமத்தினரிடம் ஸ்மார்ட்போனே கிடையாது. அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தெரியவில்லை என்றார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cash is king again in indias cashless village

Next Story
பண மதிப்பிழப்பு : செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றமா? சீறிய நிர்மலா சீதாராமன்india, tamilnadu, bjp, central minister nirmala sitharaman, tamilisai soundararajan, demonitisation, black money, pm narendra modi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com