சமூகத்தின் சில பிரிவினர் மற்றும் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும்கூட அதன் கண்டுபிடிப்புகளுக்கு தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Caste census report submitted amid objection by Lingayats, Vokkaligas; cabinet to decide, says CM
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமூக-பொருளாதார மற்றும் கல்வி ஆய்வு அறிக்கை, பொதுவாக ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ என அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் தலைவர் கே. ஜெயபிரகாஷ் ஹெக்டே, முதல்வர் சித்தராமையாவிடம் வியாழக்கிழமை சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை சமர்பித்தார்.
சமூகத்தின் சில பிரிவினர் மற்றும் ஆளும் காங்கிரஸிற்குள்ளும் கூட அதன் கண்டுபிடிப்புகளுக்கு தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது.
“இந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. அரசிடம் அறிக்கை கிடைத்துள்ளது, அது அமைச்சரவையின் முன் வைக்கப்பட்டு, அங்கே விவாதித்து முடிவு செய்யப்படும்” என்று சித்தராமையா அறிக்கையைப் பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
கர்நாடகாவின் இரண்டு ஆதிக்க சமூகங்களான - வொக்கலிகர் மற்றும் லிங்காயத் - சமூக மக்கள் இந்த கணக்கெடுப்பு குறித்து ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இது அறிவியல்பூர்வமானது அல்ல என்றும், அதை நிராகரித்து புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, கர்நாடகாவில் உள்ள பல்வேறு சாதியினரின், குறிப்பாக லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகர்களின் எண்ணிக்கை பலம் பற்றிய பாரம்பரிய கருத்துக்கு முரணானதாகக் கூறப்படும் இந்த கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள் அறிக்கையை வெளியிடுவதில் இருந்து அடுத்தடுத்த அரசாங்கங்கள் பின்வாங்கி வருகின்றன. அதை அரசியல் ரீதியாக சிக்கலான பிரச்னையாக மாற்றுகிறது.
மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் வொக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த அறிக்கையை தரவுகளுடன் நிராகரிக்குமாறு கோரி, அந்த சமூகம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்த ஒரு குறிப்பாணையில், மற்ற இரண்டு அமைச்சர்களுடன் அவர் கையெழுத்திட்டார்.
வீரசைவ-லிங்காயத்துகளின் உச்ச அமைப்பான அகில இந்திய வீரசைவ மகாசபையும் இந்த கணக்கெடுப்புக்கு தனது கண்டனத்தை தெரிவித்தது, இது அறிவியல்பூர்வமானது அல்ல என்றும், புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஷாமனுரு சிவசங்கரப்பா தலைமையில் லிங்காயத் அமைப்பு உள்ளது. மேலும், பல லிங்காயத் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் இந்த கணக்கெடுப்பு மற்றும் அதன் கண்டுபிடிப்புகளுக்கு ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளனர். இது காங்கிரஸ் அரசாங்கத்தை கடினமான இடத்தில் வைத்துள்ளது.
2015-ம் ஆண்டில், 2013-2018-ம் ஆண்டு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநிலத்தில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ தொடங்கியது. கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் அதன் அப்போதைய தலைவர் எச்.காந்தராஜுவின் கீழ் சமூக-பொருளாதார மற்றும் கல்வி ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டது.
சித்தராமையா முதலமைச்சராக இருந்த முதல் பதவிக்காலத்தின் முடிவில், 2018-ல் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தன. ஆனால், அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது பொதுவில் வெளியிடப்படவில்லை.
அதன் தற்போதைய தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கையை சமர்ப்பிக்க இருந்தது. எனினும், மேலும், சில அவகாசம் கோரப்பட்டதால், அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அவரது பதவிக்காலத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பீகார் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இந்த கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட சில பிரிவினர் சித்தராமையா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதால், இந்த அறிக்கை கிடைத்தவுடன் முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா முன்பு கூறியிருந்தார்.
ஆனால், ஆளும் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள ஆழமான பிளவுகள், இரு ஆதிக்க சமூகங்களின் கடும் எதிர்ப்பு, அதை ஏற்றுக்கொண்டதற்கு எதிராக, இந்த கணக்கெடுப்பின் அசல் ‘ஒர்க் ஷீட்’ நகல் காணாமல் போனது போன்றவற்றுக்கு மத்தியில், இந்த அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே இந்த கணக்கெடுப்பு சர்ச்சையில் சிக்கியது.
அரசியல் செல்வாக்கு பெற்ற வொக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகள் ஆகிய இரு சமூகங்களும் இந்த கணக்கெடுப்புக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை அரசுக்கு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. தலித்துகள் மற்றும் ஓ.பி.சி.கள் உள்ளிட்டோர் இந்த கணக்கெடுப்பை பகிரங்கப்படுத்தக் கோருவதால், இது மோதலுக்கு களம் அமைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்காதது மற்றும் அதை பொதுவில் வெளிப்படுத்தாதது போன்ற பழிபோடும் விளையாட்டில் ஈடுபட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.