Advertisment

பெங்களூரு தனியார் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு: தலித் ஊழியர் தற்கொலை

பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் "சாதிப் பாகுபாடு மற்றும் பணியிடத்தில் கொடுமை" எனக் குற்றங்சாட்டி போலீஸில் புகார் அளித்த சில மணி நேரங்களில் தற்கொலை

author-image
WebDesk
New Update
விவேக் ராஜ் (35)

விவேக் ராஜ் (35)

பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 35 வயதான ஊழியர், ஜூன் 3-ம் தேதி காவல்துறையில் தனது பணியிடத்தில் சாதிப் பாகுபாடு மற்றும் கொடுமை நடப்பதாக கூறி புகார் அளித்தார். புகார் அறித்த சில மணி நேரங்களில் அவர், யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அந்த வீடியோவில் நான் விவேக் ராஜ். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்தவர். என்னால் இனி எதிர்த்துப் போராட முடியாது என்று கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் கப்தங்கஞ்ச் பஸ்தி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட விவேக், பெங்களூரின் புரூக்ஃபீல்டில் உள்ள ரிபப்ளிக் ஆஃப் வைட்ஃபீல்டி பகுதியில் வசித்து வந்தார், மேலும் லைஃப்ஸ்டைல் ​​இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் விஷுவல் மெர்சன்டைசர் ஆக பணிபுரிந்து வந்தார்.

தந்தை கதறல்

இச் சம்பவம் குறித்து லைஃப்ஸ்டைல் ​​இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்ட போது, “எங்கள் ஊழியரின் மறைவைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தடைகிறோம். அவர்கள் குடும்பத்தினர், உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். விவேக் இதுகுறித்து நிறுவனத்தில் புகார் அளித்தார். நிறுவனத்தின் கொள்கைகளின்படி முழுமையான உள் விசாரணை நடத்தப்பட்டு, முடிவுகள் அவருடன் தெரிவிக்கப்பட்டது. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த விவகாரம் சப்-ஜூடிஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருவதால், அவர்களின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்" என்று நிறுவனம் கூறியது.

விவேக்கின் தந்தை ராஜ்குமார் ( 67) ஜூன் 4 அன்று விவேக்கின் தற்கொலை குறித்து புகார் அளித்தார். ராஜ்குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “காவல்துறையில் புகார் மற்றும் தற்கொலைக்கு முன் விவேக் என்னை இரண்டு முறை (ஜூன் 3 அன்று) தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எதுவும் என்னிடம் கூறவில்லை. வழக்கமான சில விஷயங்கள் மற்றும் என் உடல்நிலை பற்றி மட்டுமே கேட்டார். 20 வருடங்களுக்கு முன்பு என் மனைவியை இழந்தேன். என் மகனே எனக்கு எல்லாமுமாக இருந்தான். அவனுடைய கல்விக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். இப்போது அவனும் என்னுடன் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் தனியாக வாழ வேண்டும் என்று கூறி மனமுடைந்து பேசினார்.

ஒயிட்ஃபீல்ட் போலீசார் பிரிவு 34 மற்றும் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். விவேக் வெளியிட்ட வீடியோவில், அவர் சிலரின் பெயர்களை, சக ஊழியர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். அவர்களால் தான் "துன்புறுத்தப்படுவதாக" கூறினார். பாதிக்கப்பட்டதாக கூறினார்.

ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

விவேக் தனது போலீஸ் புகாரில் தனது சக ஊழியர்கள் 3 பேர் மீது மாரத்தஹள்ளி போலீசில் புகார் அளித்தார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் மூத்த உறுப்பினர்கள் இருவர் சாதி அடிப்படையில் தனக்கு பாகுபாடு காட்டுவதாக கூறியிருந்தார்.

அவரது புகாரின் அடிப்படையில், போலீசார் பிரிவு 3 (1) (ஆர்) (எந்த இடத்திலும் SC/ST உறுப்பினரை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல் அல்லது மிரட்டுதல்) மற்றும் 3(1) (எஸ்) பட்டியல் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் கூறுகையில், சாதிப் பாகுபாடு குறித்த பிரச்சினையை விவேக் அந்த நிறுவனத்தின் மனிதவள அதிகாரியிடம் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் அது விசாரிக்கப்பட வில்லை என்று தெரிகிறது என்றனர்.

பின்னர் அவர் மாரத்தஹள்ளி காவல்துறையை அணுகிய போதிலும், உதவி காவல் ஆணையர் (ஏசிபி) இவ்விவகாரத்தில் தலையிடும் வரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. விவேக்கின் அலுவலகம் ஜூன் 18 ஆம் தேதிக்கு முன்னர் அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அவர் எழுப்பிய புகாருடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

ஆதாரங்களின்படி, அவரது சகாக்களில் இருவர் ஜாமீன் பெற்றுள்ளனர் மற்றும் எஃப்ஐஆரில் இருந்து தங்கள் பெயர்களை ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கு தொடர்பாக சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுகுறித்து ஒயிட்ஃபீல்டு காவல்துறை துணை ஆணையர் எஸ். கிரிஷை தொடர்பு கொள்ள முயற்சித்தது ஆனால் பதில் கிடைக்கவில்லை.

நாட்டின் மாண்புமிகு பிரதமருக்கு..

விவேக் தனது 8.08 நிமிட வீடியோவில், "என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, காதுகேளாதவர்கள் கேட்க வேண்டுமானால், சத்தம் மிக அதிகமாக இருக்க வேண்டும் என்று பகத் சிங் கூறியது போல், நான் அந்த ஒலியை உருவாக்க முயற்சித்தேன்.

அமைப்பு சிதைந்துள்ளது. பணம் படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். தொடர்ந்து உங்களைத் துன்புறுத்திக் கொண்டே இருப்பார்கள், பிரச்சினையைத் தீர்க்காமல் இருப்பார்கள். நீங்கள் சட்ட அமைப்பு மூலம் தீர்வு காண முயற்சிக்கும் போது, ​​அவர்கள் சிறந்த வழக்கறிஞர்களைப் பெறுவார்கள். அவர்கள் தொல்லைகளை மறைக்க, முடிந்தவரை பணத்தை வீசத் தயாராக உள்ளனர், ஆனால் அமைப்பைச் சரிசெய்யவோ அல்லது வரையறுக்கவோ இல்லை".

“கார்ப்பரேட் துறையில் இந்தப் புரட்சியைத் தொடங்குவது நானாக இருக்கட்டும். தவறாக நடக்கும் பல விஷயங்களில் அமைதியாக இருக்கும் நாட்டின் மாண்புமிகு பிரதமருக்கு… மல்யுத்த வீரர்கள் போராட்டம் செய்கிறார்கள். நீங்கள் அதைப் பற்றி பேச மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். குறைந்த பட்சம், கார்ப்பரேட் விவகார அமைச்சகம், எஸ்சி/எஸ்டி கமிஷன், காவல்துறை இன்னும் விழிப்புடன் இருக்குமாறும், ஒத்துழைக்குமாறும், சிறந்த குறை தீர்க்கும் முறையைக் கொண்டு வருமாறும் கேட்டுக்கொள்கிறேன். எனது தியாகம் அதைக் கொண்டு வரட்டும்" என்று அவர் தனது வீடியோவில் பேசியுள்ளார்.

முன்னாள் மாணவர்கள் கேள்வி

விவேக் பெங்களூருவில் உள்ள தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் (NIFT-B) கல்வி பயின்றார். அவருடன் கல்வி பயின்ற நண்பர் ஒருவர் கூறுகையில், அவர் நன்றாக படிப்பார். கடினமாக உழைப்பார். எல்லோரிடம் நன்றாக பழகுவார். இவரின் மறைவால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம் என்றார்.

விவேக்கின் மரணத்தைத் தொடர்ந்து, சில NIFT-B முன்னாள் மாணவர்கள் சமூக ஊடகப் பிரச்சாரத்தைத் தொடங்கினர். இந்த பிரச்சாரம் விவேக்கின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு, நிறுவனத்தில் செயல்படுத்தப்பட்ட கொள்கை மாற்றங்கள் மற்றும் விவேக் மரணத்திற்கு பொறுப்பான ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிறுவனத்திடம் இருந்து பதில்களைக் கோருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bengaluru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment