Advertisment

‘எங்கள் காவிரி எங்கள் உரிமை’: கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கன்னட நடிகர்கள் சுதீப், தர்ஷன்

காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் கன்னட சினிமா நடிகர்கள் கிச்சா சுதீப், தர்ஷன் தூகுதீபா ‘எங்கள் காவிரி எங்கள் உரிமை’ என்று கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
su

கன்னட சினிமா நடிகர்கள் கிச்சா சுதீப், தர்ஷன் தூகுதீபா ‘எங்கள் காவிரி எங்கள் உரிமை’ என்று கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கன்னட சினிமா நடிகர்கள் கிச்சா சுதீப், தர்ஷன் தூகுதீபா ‘எங்கள் காவிரி எங்கள் உரிமை’ என்று கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

Advertisment

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை திறந்து விடாததால், காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்து வலியுறுத்தினர்.

இதனிடையே, டெல்லியில் செப்டம்பர் 18-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்,  “அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும்” என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்ப‌ட்டது. 

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் 19ம் தேதி வழக்கு தொடர்ந்தது. அதில், “கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. இருப்பினும் தமிழகத்தின் வேளாண்மை தேவைகளுக்காக நீர் திறந்துவிட்டுள்ளோம்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 5,000 கன அடி நீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டது. “அணைகளில் நீர் இல்லாததால் எங்களால் திறக்க முடியாது. தற்போது இருக்கும் நீரை கொண்டு கர்நாடகாவில் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்ய இயலாது. தமிழகத்துக்கு நீர் திறப்பது சாத்தியம் இல்லை என்றும் அதனால், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'” என கோரியிருந்தது.

தமிழகம் மற்றும் கர்நாடாகாவுக்கு இடையேயான காவிரி நீர் பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு, காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இணைந்து காவிரி நீர் தொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கன்னட சினிமா நடிகர்கள் கிச்சா சுதீப், தர்ஷன் தூகுதீபா ‘எங்கள் காவிரி எங்கள் உரிமை’ என்று கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

கன்னட சினிமா நடிகர் சுதீப் தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை பதிவிட்டிருப்பதாவது: “எங்கள் காவிரி எங்கள் உரிமை, மக்களுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஒரு உத்தியை உருவாக்க நிபுணர்களின் உடனடி தலையீடு தேவை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

“எங்கள் காவிரி எங்கள் உரிமை, ஒருமித்த கருத்துடன் வெற்றி பெற அரசு, காவேரியை நம்பும் மக்களை கைவிடாது என்று நம்புகிறேன். வல்லுநர்கள் உடனடியாக வியூகம் வகுத்து நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிலம், நீர் மொழிப் போராட்டம் ஆகியவற்றில் எனது குரல் இருக்கிறது. கர்நாடகத்தை காவேரி அன்னை காக்கட்டும்” என சுதீப் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“கர்நாடகாவின் பங்கில் இருந்து காவிரி நீரை குறைத்து அதிக தண்ணீர் பெற தொடர் முயற்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகம். இந்த நேரத்தில் பாசனப் பகுதிக்கு பாதிப்பு அதிகம். எல்லாப் புள்ளி விவரங்களையும் பரிசீலித்து, கூடிய விரைவில் நீதியைப் பெறுங்கள்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தர்ஷன் தூகுதீபா பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று, கர்நாடகா தனது அண்டை மாநிலமான தமிழகத்திற்கு, 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தேசிய தலைநகரில் விவாதிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, முக்கியமான கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா கூறுகையில், “காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை கோருகிறோம். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முன் எங்களின் உண்மை நிலையை நாங்கள் திறமையாக முன்வைத்தோம். 123 ஆண்டுகளில் ஆகஸ்டில் மிகக் குறைந்த மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இது கர்நாடக மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு குடிநீர் இல்லை, பயிர் காக்க தண்ணீர் இல்லை, தொழிலுக்கு தண்ணீர் இல்லை. அதனால், நாங்கள் மிகவும் சிரமத்தில் உள்ளோம்” என்று கூறினார்.

இரு மாநில மக்களையும் அழைக்கும் அதிகாரம் இருப்பதால், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் சித்தராமையா கூறினார்.

 “பிரதமருக்கு இரு மாநில மக்களையும் வரவழைக்க அதிகாரம் உள்ளது. எனவே பிரதமரின் தலையீட்டிற்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேலும் முடிவுகள் எடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள 195 தாலுகாக்களை நாங்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளோம். 123 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆகஸ்டு மாதத்தில் மிகக் குறைந்த மழைப்பொழிவு பதிவாகியுள்ளது, இது மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று சித்தராமையா கூறினார்.

துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்குப் பிறகு, கர்நாடகம் குடிநீருக்கே பஞ்சத்தை எதிர்கொள்கிறது. நாங்கள் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். எங்களிடம் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் மட்டுமே உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு 5000 கனஅடி தண்ணீர் கொடுக்க எங்களுக்கு உத்தரவிட்டது, எங்களுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாங்கள் விவாதித்தோம். எங்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர். எங்களுக்கு நீதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என்று டி.கே.சிவகுமார் கூறினார்.

காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பான கூட்டத்தில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, ஷோபா கரந்த்லாஜே, பகவந்த் கூபா, நாராயணசாமி, ராஜீவ் சந்திரசேகர் மற்றும் கர்நாடகா சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், கர்நாடகா, தமிழகம் இடையே நிலவும் சண்டையை சட்டப்படி தீர்க்க முடியாது என்றும், இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்த பிறகுதான் தீர்வு கிடைக்கும் என்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cauvery Issue
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment