/tamil-ie/media/media_files/uploads/2018/06/s268.jpg)
கர்நாடக முதல்வர் குமாரசாமியை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பெங்களூருவில் சந்தித்து பேசினார்.
அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது கமல் பேசுகையில், "குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். காவிரி விவகராம் தொடர்பாக இருவரும் விவாதித்தோம். எனது கருத்துகளை முதல்வர் குமாரசாமி ஏற்றுக் கொண்டார். நம்மை போன்றே குமாரசாமி அவர்களும் இந்த விவகாரத்தை அணுகுவதை நினைக்கும் போது உண்மையில் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சட்டப்படி தீர்ப்பு வந்தாலும், இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டுமெனில், இரு மாநில மக்களின் ஒத்துழைப்பு தேவை. குமாரசாமியுடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல, மக்கள் நலனுக்கானது" என்றார்.
காலா குறித்து பேசினீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'காலா குறித்து கர்நாடக முதலமைச்சரிடம் பேசுவது தேவையற்றது; பேசவும் இல்லை' என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் குமாரசாமி, "இருவரும் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து விவாதித்தோம். கர்நாடகத்தில் இருக்கும் விவசாயிகளும் வாழ வேண்டும். தமிழக விவசாயிகளும் வாழ வேண்டும். இரு மாநில மக்களுக்கும் காவிரி முக்கியம். அதற்கேற்ப யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இரு மாநில மக்களும் சகோதரர்களாக இருக்கிறோம்" என்றார்.
More Details Awaited...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.