ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் முதல் கூட்டம்

காவிரி மேலாண்மை ஆணையம் குழுவில் கர்நடகாவின் இரண்டு பிரதிநிதிகளை நியமிக்க பெயர்களை பரிந்துரை செய்தார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. இதையடுத்து ஜூலை 2ம் தேதி முதல் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவிரி…

By: June 26, 2018, 8:36:52 AM

காவிரி மேலாண்மை ஆணையம் குழுவில் கர்நடகாவின் இரண்டு பிரதிநிதிகளை நியமிக்க பெயர்களை பரிந்துரை செய்தார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. இதையடுத்து ஜூலை 2ம் தேதி முதல் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் சம்மந்தப்பட்ட மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில், தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதி நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் குழுவில் நியமனம் செய்ய கர்நாடகம் சார்பில், கர்நாடக அரசின் நீர்வளத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங், ஒழுங்காற்று குழுவுக்கு காவிரி நீர்ப்பாசன கழக நிர்வாக இயக்குனர் எச்.எல்.பிரசன்னா ஆகியோரை உறுப்பினர்களாக நியமிக்க மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகிற ஜூலை 2-ந் தேதி டெல்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு குறித்து ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Cauvery management board meeting to be held on july 2 for the first time

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X