காவிரி மேலாண்மை வாரியத்தை தடுக்கும் பணி 2 மத்திய அமைச்சர்களிடம் ஒப்படைப்பு : சித்தராமையா

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுக்கும் பொறுப்பை இரு மத்திய அமைச்சர்களிடம் விட்டிருப்பதாக சித்தராமையா கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுக்கும் பொறுப்பை இரு மத்திய அமைச்சர்களிடம் விட்டிருப்பதாக சித்தராமையா கூறினார்.

கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா, மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் பரிந்துரை செய்துள்ளதே தவிர, உத்தரவிடவில்லை. காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒரு ‘ஸ்கீம்’-ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள் என்றுதான் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அதனால் யாரும் பயப்பட தேவையில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினேன். அதில் மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்த கவுடா பங்கேற்றனர். அவர்களிடம், மத்தியில் நீங்கள்தான் ஆட்சி செய்கிறீர்கள், நீங்கள்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக் கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அது உங்கள் பொறுப்பு என்று கூறினேன்.

என்னைப்பார்த்து பா.ஜனதா தலைவர் அமித் ஷாவுக்கு பயம். அதனால்தான் நான் சென்று ஆதரவு திரட்டிய இடங்களுக்கெல்லாம், அவரும் சென்று வருகிறார். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அது அவருடைய தனிப்பட்ட விஷயம்.

ஆனால் நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று என்னைப்பற்றி அமித்ஷா அவதூறாக பேசி இருக்கிறார். முதலில் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரா? அல்லது ஜெயின் சமுதாயத்தைச் சேர்ந்தவரா? என்பதை நிரூபிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

×Close
×Close