Cauvery protest : விவசாயிகள் குழுக்கள் மற்றும் கன்னட சார்பு அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (செப்.26) பெங்களூரு பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதனால், நகரத்தில் பல நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் 175-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பந்த் நடத்துவதாக அறிவித்துள்ளன.
இந்த பந்த் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் தங்கள் முழு ஆதரவை வழங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையா அரசுவும் ஆதரவு அளித்துள்ளதால் இது முழுமையடைய வாய்ப்புள்ளது.
என்ன சேவைகள் மூடப்படலாம்?
கேஎஸ்ஆர்டிசி (KSRTC) மற்றும் பிஎம்டிசி (BMTC) பேருந்துகள் இயங்க வாய்ப்புகள் இல்லை.
ஓலா, உபேர் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தன்வீர் பாஷா பந்த்க்கு ஆதரவு அளித்துள்ளார். இதனால் ஓலா, உபேர் இயங்க வாய்ப்புகள் இல்லை.
கல்லூரி, பேருந்துகள்
தனியார் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் சசிகுமார், கையில் கருப்பு பட்டை அணிந்து ஆதரவு அளிப்போம் என தெரிவித்தாலும், பல பள்ளி, கல்லூரிகளுக்கு இன்னும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
ஹோட்டல் மற்றும் உணவகங்கள்
விவசாயிகள் போராட்டத்துக்கு, ஹோட்டல் மற்றும் உணவகங்கள் ஆதரவு அளித்துள்ளன. இதனால் ஹோட்டல்கள் நாளை மூடப்பட்டிருக்கும்.
இந்த சேவைகள் இயங்கும்
மெட்ரோ
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் செவ்வாய்க்கிழமை நகரம் முழுவதும் மெட்ரோ சேவைகளை இயக்குகிறது. பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ ரயில் பாதையில் எந்த தடங்கலும் இருக்காது.
அவசர சேவைகள்
ஆம்புலன்ஸ்கள், மருந்து வாகனங்கள் மற்றும் பிற முக்கியமான சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போன்ற அனைத்து அவசர சேவை தொடர்பான வாகனங்களும் செயல்படும். மருத்துவமனைகள், மருத்து கடைகள் வழக்கம் போல் இயங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“