மகாராஷ்டிரா முன்னாள் உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தொடர்புடைய வழக்கின் விசாரணை அறிக்கைகள் இணையத்தில் கசிந்ததையடுத்து, சிபிஐயிட ஜாக்கிரதையுடன் செயல்பட தொடங்கியுள்ளது. தற்போது ஏஜென்சியின் பாதுகாப்புக்கு டிஐஜி அளவிலான அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இனிமேல், அதிகாரிகள் பென்டிரைவ் போன்ற சாதனங்கள் பயன்படுத்த முடியாது. அதேபோல், ஏஜென்சிக்கு வருபவர்களும், வெளியே செல்பவர்களும் தீவிரமாக சோதனை செய்யப்படவுள்ளனர். ஊடகங்கள் உட்பட வெளியுலகத்துடன் தொடர்பு கொண்டால், சேவையில் இருந்து நீக்கப்படலாம் என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால், கடந்தாண்டு அனில் தேஷ்முக் தொடர்பாக சிபிஐ நடத்திய முதற்கட்ட விசாரணை அறிக்கை சமூக வலைதளத்தில் வெளியானதால், முறையாக வழக்குப்பதிவு செய்ய முடியாத சூழ்நிலை உருவானது. இது சிபிஐ அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியது.
மீண்டும் கிடைத்த பிரைவசி
உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணையின் போது, மற்றவர்களுக்கு கேட்காத வகையில பென்சில் அமர்ந்தப்படியே நீதிபதிகளிடையே வழக்கு குறித்து ரகசியமாக பேச வாய்ப்பிருந்தது. ஆனால், தற்போது ஆன்லைன் விசாரணை முறையில் நீதிபதிகளிடைய ரகசியமாக பேச முடியாதது சிக்கலாக இருந்து வந்தது.
இதையறிந்த, உச்ச நீதிமன்றத்தின் கம்பூயுட்டர் கமிட்டி பிரேக் அவுட் சாட் ரூம் என்ற ஐடியாவை கொண்டு வந்தனர். நீதிபதிகள் தனியாக கலந்தாலோசிக்க விரும்பினால், திரையில் உள்ள நபர்களுக்கு பொதுவாக கூறிவிட்டு, பிரேக் அவுட் சாட் ரூம் கேட்டகரிக்கு செல்லலாம். அப்போது, நீதிபதிகள் தவிர மற்ற அனைவரும் திரையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த ஐடியா மூலம், நீதிபதிகளின் பிரைவசி நேரம் மீண்டும் கிடைத்துள்ளது.
தெலுங்கு தொடர்பு
இந்திய தலைமை நீதிபதி என்.வி ரமணா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து பத்மா விருதுகளை பெற்ற நபர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெலுங்கு மொழியில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாரத் பயோடேக் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணா எல்லா மற்றும் சுசித்ரா எல்லா இருவரும் தெலுங்கு சமூதாயத்தை பெருமைபடுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil