நில மோசடி வழக்கில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோர் மீதும் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிக்கை ஏகே இன்ஃபோசிஸ்டம்ஸ் மற்றும் பல இடைத்தரகர்கள் உட்பட 14 பேரின் பெயர்கள் உள்ளன.
முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யும் போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பாத்திரங்களை முழுமையாக விவரிக்க முடியாததால் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலைக்கு நிலம் வழக்கு என்ன?
2004 முதல் 2009 வரை லாலு மத்திய அமைச்சராக இருந்தபோது, பாட்னாவைச் சேர்ந்த 12 பேர் ரயில்வேயில் குரூப் டி பதவிகளுக்கு தேர்வாகினர்.
இது விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறி, எந்த விளம்பரமும் அல்லது பொது அறிவிப்பும் இல்லாமல் செய்யப்பட்டது.
இதற்குப் பிரதிபலனாக 12 பேர் நிலம் வழங்கினர் என்பதே குற்றச்சாட்டு ஆகும். அதாவது இந்த நிலங்கள் குறைந்த விலைக்கு, மானியத்தில் அல்லது ரூபாய் எதுவும் பெறாமல் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“