சிபிஐ இயக்குநரை கட்டாய விடுப்பில் அனுப்பியது சரியா ? செவ்வாய்க் கிழமை உச்ச நீதிமன்ற விசாரணை

மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அறிக்கைக்கு அலோக் வர்மா தரப்பில் இன்று பதில்கள் தாக்கல் செய்யப்பட்டன.

CBI Director Alok Verma : மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் லஞ்ச புகார்களை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது பிரதமர் அலுவலகம்.

கட்டாய விடுப்பில் செல்ல இயலாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, எதன் அடிப்படையில் “மத்திய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் அலோக் வர்மா மீது நடவடிக்கை மேற்கொண்டது?” என்று 10 நாட்களுக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்.கே. கவுல், ஏ.எம் ஜோசப் அமர்ந்த அமர்வு. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க 

CBI Director Alok Verma தரப்பு பதிவு

இந்த உத்தரவினை தொடர்ந்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தங்கள் தரப்பில் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று தன்னுடைய தரப்பில் இருந்து பதில் தாக்கல் செய்தார். மேலும் அதற்கு கால அவகாசம் கேட்டிருந்தார் அலோக் வர்மா. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணி வரை அவருக்கு நேரம் ஒதுக்கியுள்ளது.

கடந்த வாரம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அளித்த அறிக்கையில், அலோக் வர்மாவின் விசாரணைகள் குறித்து மதிப்பீடு செய்திருக்கிறார்கள். சில வழக்குகளுக்கு “வெரி காம்ப்ளிமெண்ட்ரி” என்றும் சில வழக்குகளுக்கு “காம்ப்ளிமெண்ட்ரி” என்றும், இன்னும் சில வழக்குகளுக்கு  “நாட் வெரி காம்ப்ள்ரிமெண்ட்ரி” என்றும் மதிப்பீடுகள் செய்திருக்கின்றன.

இன்று அலோக் வர்மா தரப்பில் இருந்து கூறப்படும் பதில்களை கணக்கில் கொண்டு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close