Advertisment

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு : ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு சிபிஐ நோட்டீஸ்

சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக இருந்தபோது ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவருடன் தொடர்புடைய இரண்டு கோப்புகளை அழிப்பதற்காக தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறினார்.

author-image
WebDesk
New Update
Governor

ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்ய பால் மாலிக்

இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்ய பால் மாலிக்கிற்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த நோட்டீஸ் குறித்து பதில் அளித்துள்ள மாலிக், "சில விளக்கங்கள் தேவைப்படுவதாக இங்குள்ள ஏஜென்சியின் அக்பர் ரோடு விருந்தினர் மாளிகையில் சிபிஐ தன்னை ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும் சிபிஐ அதிகாரிகள் தன்னிடம் இருந்து சில விளக்கங்களை பெற விரும்புகிறார்கள், இதில் நானும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க விரும்புகிறேன். நான் ராஜஸ்தானுக்குச் செல்கிறேன், அதனால் ஏப்ரல் 27 முதல் 29 வரை நான் நேரில் வருவதாக தெரிவித்துள்ளேன், ”என்று மாலிக் கூறியுள்ளார்.

அக்டோபர் 2021 இல், ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) தலைவருடன் தொடர்புடைய இரண்டு கோப்புகளை அழிக்க தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மாலிக் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்து ஏப்ரல் மாதம் 14 இடங்களில் சோதனை நடத்தியது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் (RGIC) மற்றும் சினாப் வெள்ளி பவர் பிராஜக்ட் (Chenab Valley Power Projects Pvt Ltd (CVPPPL) அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

தான் ஜம்மு காஷ்மீது கவர்னராக இருந்தபோது, தனக்கு இரண்டு கோப்புகள் வந்தது. அதில், ஒன்று "அம்பானி" மற்றொன்று "ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்" தொடர்பானது. "இவை இரண்டும் மோசமான ஒப்பந்தங்கள், ஆனால் அதை செயல்படுத்தினால் தலா 150 கோடி பெறலாம் என்று என்னிடம் கூறினார். ஊழலில் சமரசம் செய்யக்கூடாது என்று நான் அவர்களை எச்சரித்தேன் என்று மாலிக் கூறினார். ஆனால் அவை என்னென்ன கோப்புகள் என்பதை மாலிக் குறிப்பிடவில்லை என்றாலும், அரசு ஊழியர்களுக்கு உடல்நலக் காப்பீடு வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தம் தொடர்பானது.

2018 அக்டோபரில் மாலிக் ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மற்ற விஷயம் கிரு ஹைடல் மின் திட்டம் தொடர்பான குடிமராமத்து பணிகளைப் பற்றியது. கடந்த ஆண்டு, இரண்டு ஊழல் வழக்குகள் தொடர்பாக சத்யபாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலச்சியம் குறித்து பேச வேண்டாம் என்றும் இது குறித்து அமைதியாக இருக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக மாலிக் கூறிய சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு சிபிஐ சம்மன் வந்தது.

ஆகஸ்ட் 2018 முதல் அக்டோபர் 2019 வரை ஜே & கே கவர்னர் மாலிக், சிஆர்பிஎஃப் தனது பணியாளர்களை அழைத்துச் செல்ல ஐந்து விமானங்களை வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்தது. இதன் விளைவாக ஏராளமான பாதுகாப்புப் பணியாளர்கள் ஒரு வாகனத் தொடரணியில் சாலை வழியாக சென்றபோது தாக்குதலுக்கு இரையானதாக தெரிவித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment