Mamata Banerjee Dharna : ‘என் வாழ்க்கையை இழக்கத் தயார்… ஆனால், சமரசம் கிடையாது’ : மம்தா அதிரடி

CBI-police face off : இன்று உச்சநீதிமன்றத்தை நாடுகிறது சிபிஐ

By: Updated: February 4, 2019, 07:00:20 PM

Mamata Banerjee Dharna : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் சிபிஐக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிபிஐ வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் மீது, குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை விசாரித்தது சிறப்பு புலனாய்வு குழு. இந்த குழுவுக்கு தலைமை பொருப்பு ஏற்றிருந்தார் ராஜீவ் குமார். இவர், தற்போது கொல்கத்தா மாநகர காவல் ஆணையராக உள்ளார்.

சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பான சில ஆவணங்கள் மர்மமாக மறைந்த நிலையில், இது குறித்து விசாரிக்க ராஜீவ் குமாருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ஆனால் அந்த விசாரணைக்கு ஆஜராவதை ராஜீவ் தொடர்ந்து தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்தவதற்காக, கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று சென்றிருந்தனர். அப்போது அவர்களை உள்ளே விடாமல், கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் சிபிஐ அதிகாரிகளை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வலுக்கட்டாயமாக கொண்டு வந்த போலீசார், அவர்களை காவல்நிலையத்திற்கும் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, கொல்கத்தா காவல் ஆணையரான ராஜீவ் குமார் தான் உலகின் தலைசிறந்த போலீஸ் அதிகாரி எனப் புகழ்ந்துள்ளார். ராஜீவ் குமாரின் நேர்மை, தைரியம், அர்ப்பணிப்பு ஆகியவை கேள்விக்கிடமற்றவை எனக் கூறியுள்ள மம்தா பானர்ஜி, தற்போது அவர் விடுப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஜீவ் குமார் மீதான குற்றச்சாட்டு, பாஜக அரசின் உட்சபட்ச அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் அவர் சாடியுள்ளார். காவல்துறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், நாட்டின் அனைத்து அமைப்புகளையும் அழிக்கும் நோக்கிலும் பாஜக செயல்படுவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “பிரதமர் மோடி இந்த நாட்டை சீறழித்து வருகிறார். சிபிஐ அதிகாரிகள் பிடி வாரண்டு கூட இல்லாமல் எப்படி கொல்கத்தா ஆணையர் வீட்டுக்கு வரலாம்? எனது மாநிலத்தின் காவல்த்துறையை எண்ணி பெருமைபபடுகிறேன். கொல்கத்தாவின் காவல் ஆணையர் தான் சிறந்தவர்” என்றும் மோடி மீதும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீதும் குற்றம் சாட்டினார்.

CBI-police face off  : மேற்கு வங்கம் தர்ணா போராட்டம்

06:45 PM : ‘என் வாழ்க்கையை இழக்க தயார்… ஆனால், சமரசம் கிடையாது’ : மம்தா

‘என் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்’ என்று பாஜகவுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

05:45 PM : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உச்சநீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதாக மேற்குவங்க தலைமைச் செயலாளர், டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

3:00 PM : அரசியல் ஆதாயமற்றது: மம்தா

அரசியல் கட்டமைப்பை காப்போம் என்ற நோக்கத்தை முன்வைத்து மம்தா நடத்தி வரும் தர்ணா போராட்டம் முழுக்க முழுக்க அரசியல் ஆதயமற்றது என்றும் இதனை அமைதியான வழியில் நடத்தி முடிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

2:00 PM : கூடுதல் புலனாய்வுத்துறை இயக்குநர் ஆளுநருடன் சந்திப்பு

மம்தா தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில், கூடுதல் புலனாய்வுத்துறை இயக்குநர் மேற்கு வங்க ஆளுநரை சந்தித்து பேசினார்.

1:00 PM : உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

காவல் ஆணையர் ராஜீவ் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனை நிரூபிக்குமாறு அவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ராஜீவ் இதில் குற்றவாளி என நிரூபனமானால் அவருக்கு நிச்சயம் தகுந்த தண்டனை கிடைக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

12:00 PM : உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் சிபிஐக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிபிஐ வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:30 AM : மம்தாவிற்கு தொடர்ந்து வலுக்கும் ஆதரவு

கொல்கத்தா ஆணையர் ராஜீவ் குமாரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தங்களின் ஆதரவை மம்தாவிற்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : மாநில மற்றும் தேசியக் கட்சிகளின் கருத்துகள் என்ன ?

9:30 AM : உச்சநீதிமன்றம் செல்லும் சிபிஐ

மேற்கு வங்கத்தில் காவல் ஆணையர் மீதான விசாரணையை தடுத மேற்கு வங்க காவல்துறை மற்றும் மம்தாவிற்கு எதிராக, ‘சட்டத்தை பின்பற்ற இடையூறாக இருப்பதாக’ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறது சிபிஐ

9:00 AM : மேற்கு வங்க தர்ணா போராட்டம்

மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி தலைமையில், தர்ணா போராட்டம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Cbi mamata banerjee live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X