ஆகஸ்ட் 9 ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் ஜூனியர் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷிடம் சி.பி.ஐ தொடர்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தியது.
இதுவரை, கோஷ் கடந்த மூன்று நாட்களில் 30 மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டுள்ளார், மத்திய ஏஜென்சி அதிகாரிகள் சம்பவத்திற்கு முன்னும் பின்னும் அவரது தொலைபேசி அழைப்புகளின் விவரங்களைக் கேட்டு ஏதேனும் சதி உள்ளதா ? என்பதைக் கண்டறிய, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆங்கித்தில் வாசிக்க: CBI questions ex-principal of R G Kar Hospital for 3rd day
மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்தில் இறந்து கிடந்த ஜூனியர் டாக்டரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்க மூன்று மணி நேரம் தாமதம் ஆனதைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளையும் மத்திய நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
“குற்றம் நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள சுவாச மற்றும் மார்பு மருத்துவப் பிரிவில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்குவதற்கான மருத்துவமனை அதிகாரிகளின் முடிவைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை நாங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். சம்பவம் நடந்த நேரத்தில் இருந்து மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளோம் ” என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“