Advertisment

கார்த்தி சிதம்பரத்தை மும்பை அழைத்துச் சென்று சிபிஐ விசாரணை!

கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் மும்பை அழைத்துச் சென்றுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கார்த்தி சிதம்பரத்தை மும்பை அழைத்துச் சென்று சிபிஐ விசாரணை!

கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது, அவரின் மகன் கார்த்தி சிதம்பரம், அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தனது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி, கார்த்தி சிதம்பரம் அந்நிறுவனத்தை தனது கட்டுபாட்டில் இயக்கி வந்தாகவும், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து கார்த்திக்கு பெருமளவில் பணம் தரப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வந்தது.

Advertisment

பின்பு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 1ம் தேதி அனுமதி அளித்தது. இந்நிலையில், நாளை மறுநாளுடன் (மார்ச் 6) விசாரணைக் காவல் முடிவடைய உள்ள நிலையில், கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் மும்பை அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கில் கூடுதல் ஆதாரங்களை திரட்டும் வகையில் அவரை மும்பை அழைத்துச் சென்று சி.பி.ஐ தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியாவின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நடத்தியது. அதில், இந்த மோசடியில் ப.சிதம்பரத்திற்கு தொடர்புள்ளதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது. மேலும் அந்த ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் கூறப்பட்டது.

இவர்கள் இருவரும் ஷீனா போரா கொலை வழக்கில் ஏற்கனவே கைதாகி மும்பை சிறையில் உள்ளனர். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்காக சிபிஐ மும்பை அழைத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment