நாடு முழுவதும் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளின் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இந்த தேர்வுகளை முன் கூட்டியே தொடங்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை
அதன்படி 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் வரும் 2019ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைகிறது. மேலும், 10ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வுகள் பிப்ரவரி 21ல் தொடங்கி மார்ச் 29ல் முடிவடைகிறது.
இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் முழு விவரத்தையும், cbse.nic.in. என்ற இணையத்தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
எந்த தேதிகளில் எந்தந்தெந்த தேர்வுகள் நடைபெறுகிறது என்பதை அறிய இதை படிக்கவும்