Advertisment

CBSE 10th Result 2018 : சி.பி.எஸ்.இ 10- வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சென்னை 2-வது இடம்

CBSE 10th Result 2018 சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பெற.. cbse.examresults.net , results.nic.in/index , cbseresults.nic.in, results.gov.in

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE 10th Result 2018

CBSE 10th Result 2018

CBSE 10th Result 2018 சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(29.5.18) வெளியானது. சிபிஎஸ்இ-யின் ww.cbseresults.nic.in தளத்தில் வெளியிடப்பட்டது.

Advertisment

CBSE 10th Result 2018 சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது. சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும், 16,38,428 மாணவ, மாணவியர் இந்த வருடம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் முன்கூட்டியே பகல் 1.30 மணிக்கு இணையதளத்தில் வெளியானது.

CBSE 10th Result 2018 சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வு எழுதிய மாணவர்கள் www.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று மதிப்பெண்களை பெறலாம். இதுதவிர, cbse.examresults.net , results.nic.in/index , cbseresults.nic.in, results.gov.in போன்ற வலைதளங்கள் வாயிலாகவும் பெறலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் கூறியுள்ளது.

CBSE 10th Result 2018 LIVE UPDATES : சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(29.5.18) வெளியானது. அதன் லைவ் அப்டேட்: 

5:00 PM : சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வில் இந்த ஆண்டு முதலிடம் பெற்ற மேக்னா ஸ்ரீவத்சவா, ‘கடின உழைப்புதான் வெற்றியின் பிரதான ரகசியம்’ என கூறியிருக்கிறார்.

4:00 PM : கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 95.96 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் 89.49.

3:15 PM : சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மண்டலங்கள் : திருவனந்தபுரம்-99.60 சதவிகிதம், சென்னை-97.37 சதவிகிதம், ஆஜ்மீர்-91.86 சதவிகிதம்

2.15 PM : மாணவர்களை விட மாணவிகள் 3.35 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 85.32 சதவிகிதம். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 88.67!

 2.10 PM : CBSE 10th result 2018-ல் திருவனந்தபுரம் மண்டலம் 99.6 சதவிகித தேர்ச்சியுடன் முதல் இடத்தைப் பெற்றது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்ச்சியிலும் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், சென்னை மண்டலம் 2-வது இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 CBSE 10th Result 2018 CBSE 10th Result 2018: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்

2:00 PM : சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் results.nic.in இணையதளங்களில் காணலாம். கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியன முறையே google.com மற்றும் bing.com இணையதளங்களில் தேர்வு முடிவை வெளியிடுகின்றன. மேலும் ஆண்ட்ராய்டு, iOS மற்றும் Windows-based ஸ்மார்ட் போன்களின் UMANG மொபைல் அப்ளிகேஷனில் தேர்வு முடிவை காணலாம். விண்டோஸ் செயலியிலும் தேர்வு முடிவை காணலாம்.

1:50PM: பிரகாஷ் மிட்டல் உள்பட 3 பேர் 500-க்கு 499 என ஒரே மதிப்பெண்களை பெற்றனர்.

1:40PM : சிபிஎஸ்இ தேர்வில் இந்த ஆண்டு 86.70 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

1.30 PM : மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் முன்னதாக பகல் 1.30 மணிக்கு வெளியானது.

 

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment