CBSE 12th result 2018: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2018 இன்று (மே 26 வெளியாகிறது. இந்தத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, cbse.nic.in, results.nic.in ஆகிய இணையதளங்களில் பகல் 12 மணிக்கு பிறகு பார்க்கலாம்
CBSE 12th Result 2018: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சென்னை இரண்டாவது இடம்!
CBSE 12th result 2018 சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது ‘ரேங்க்’களை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிடுவதில்லை. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் வெளியிடும் தகவல்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் முதலிடம் யார்? என்பது தெரிந்துவிடும்.
CBSE 12th result 2018 சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இந்த வேளையில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்கிற தகவலை தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் உங்களுக்கு தருகிறது.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு (2017) அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றவர், ரக்ஷா கோபால். டெல்லி, நொய்டாவில் உள்ள ஆமிட்டி இண்டர்நேஷனல் பள்ளி மாணவியான இவர் 99.6 சதவிகித மதிப்பெண்கள் பெற்றார். பாட வாரியாக ஆங்கிலம்-100, வரலாறு-99, அரசியல் அறிவியல்-100, எக்கனாமிக்ஸ்-100, சைக்காலஜி-99 என இவரது மதிப்பெண்கள் அமைந்தன.
சி.பி.எஸ்.இ. தேர்வில் பெரும்பாலும் அறிவியியல் பிரிவு மாணவர்களே ‘டாப்’ ரேங்க்களை பெற்று வருகிற சூழலில், கலைப் பிரிவு மாணவியான ரக்ஷா முதலிடம் பெற்றதே ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. தற்போது அவர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) அரசியல் அறிவியியல் மாணவி!
இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு ரக்ஷா அளித்த பேட்டியில், ‘அறிவியியல் மாணவர்கள்தான் டாப் ரேங்கில் வர முடியும் என நினைப்பது தவறான நம்பிக்கை! தியரியில் சென்டம் எடுக்க முடியாது என்கிற நம்பிக்கையிலேயே பலர் தங்கள் முயற்சிகளை புதைத்துக் கொள்கிறார்கள். நிஜம் அப்படி அல்ல. அதை உணர்ந்ததால்தான் என்னால் சாதிக்க முடிந்தது’ என்றார்.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு 2016-ம் ஆண்டு தேர்வில் டெல்லியை சேர்ந்த சுக்ரிதி குப்தா 497 மதிப்பெண்களுடன் (99.4 சதவிகிதம்) முதலிடம் பெற்றார். இவர், டெல்லி மான்ட்போர்ட் பள்ளி மாணவி! தற்போது டெல்லி ஐ.ஐ.டி-யில் பி.டெக் படிக்கிறார். 2015-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத் தேர்வில் டெல்லி, சாகெட் பகுதியில் உள்ள கிரீன்ஃபீல்ட் பள்ளி மாணவி எம்.காயத்ரி முதலிடம் பெற்றார். அவரது மதிப்பெண்கள் 496 (99.2சதவிகிதம்). காயத்ரியும், காமர்ஸ் பிரிவு மாணவிதான்!
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு 2014-ம் ஆண்டு தேர்வில் வசந்த் குஞ்ச் பகுதியில் அமைந்துள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் மாணவர் சர்தாக் அகர்வால் முதலிடம் பெற்றார். அவரது மதிப்பெண் சதவிகிதம் 99.6! இவர் தற்போது டெல்லி, ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் எக்கனாமிக்ஸ் (ஹானர்ஸ்) படிக்கிறார்.
2013-ம் ஆண்டு முதலிடம் பெற்ற டெல்லி மாணவர் பராஸ் ஷர்மா 500-க்கு 495 மதிப்பெண்கள் (99 சதவிகிதம்) பெற்றார். கணிதம், அக்கவுண்டன்சி, எக்கனாமிக்ஸ், பிசினஸ் ஸ்டடிஸ் ஆகியவற்றில் தலா 100 மதிப்பெண்கள் பெற்ற பராஸ் ஷர்மா, ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
2012-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற மணிப்பூர் மாணவர் முகம்மது இஸ்மத், 99 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட செயின்ட் ஸ்டீபன்’ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். இந்த ஆண்டு சாதனையாளர்கள் சாதிக்க வாழ்த்துகள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.