சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த சிபிஎஸ்இ தேர்வுகளில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 12 ம் வகுப்பின் பொருளாதார பாடமும், 10ம் வகுப்பைச் சேர்ந்த கணிதம் பாடத்தின் வினாத் தாள்களும் இணையதளத்தில் கசிந்தது. இது தொர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த இடண்டு பாடங்களிலும், மாணவர்கள் மறு தேர்வு எழுத வேண்டும் என்று சிபிஎஸ்இ ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தில்லியில் மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய மாணவர்கள், “மறுதேர்வு நடத்தினால் அனைத்துப் பாடங்களிலும் நடத்துங்கள், இல்லை எந்தப் பாடத்திற்கும் நடத்தாதீர்கள். எங்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்.” என்று தங்களின் வெளிப்படுத்தினர்.
தற்போது, மாணவர்களின் மறுதேர்வு தேதியை மத்திய இடைக்கால கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
- 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் பொருளாதாரம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும்.
- 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் கணிதம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும்.
இவ்விவகாரத்தில் இன்று பயிற்சி மையம் நடத்திய ஆசிரியர் விக்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு 18 மாணவர்கள் உட்பட 25 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.