மே 6 நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் குறித்து சிபிஎஸ்இ அறிவிப்பு

மே 6 ம் தேதி, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான கட்டுப்பாடுகள் குறித்த...

இந்தியாவில் மாணவர்களின் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முதன் முதலில் 2016ம் ஆண்டு மே 1ம் தேதி நடைபெற்றது. பின்வரும் நாட்களிலும் தேர்வு நடைபெற்றது. தற்போது இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

மே 6 ம் தேதி, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத வரும் மாணவர்கள் சிபிஎஸ்இ அளித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும், மீறினால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டுப்பாடு அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை:

மாணவர்கள் வெளிர் நிற ஆடைகளையே உடுத்த வேண்டும்.

-ஆடைகளில் அரைக்கை மட்டுமே இருக்க வேண்டும். முக்கால் அல்லது முழுக்கை ஆடை அணிந்து வரக் கூடாது.

-பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது.

-ஷூ அணியக் கூடாது.

– குறைந்த உயரம் கொண்ட செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளுக்குத் தடை.

-சாதாரண செருப்புகள் அல்லது சேண்டல்கள் மட்டுமே அணிய அனுமதி.

– பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவை அணியக் கூடாது.

– தொலைத்தொடர்பு சாதனங்கள் எதுவும் எடுத்து வரக்கூடாது.

– ஜியாமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பை, பெல்ட், தொப்பி போன்ற பொருட்களுக்குத் தடை.

– நகைகள் மற்றும் வாட்ச் அணியக் கூடாது.

இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் மாணவர்கள் நிச்சயம் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆடை கட்டுப்பாடு குறித்து எழுந்த சர்ச்சையை இந்த ஆண்டு தவிர்க்கவே முன்னதாக அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

×Close
×Close