CBSE Class 10th and 12th Vocational Exam Datesheet : 2019 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பிற்கான தேர்வு அட்டவணை விவரங்களை தேர்வாணையம் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய பாடங்களான மொழிப்பாடம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியியல், பொருளாதாரம், வணிகம், கணக்குப் பதிவியல் உள்ளிட்டவை மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. அதே போல் தொழில்முறை பாடங்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி இரண்டாவது பாதியில் நடத்தப்படும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில், தேர்வு முடிவுகள், மறுமதிப்பீடு ஆகியவற்றை கல்லூரி சேர்க்கைக்கு முன்பாக நடத்த வழிவகை செய்யுமாறு சிபிஎஸ்இக்கு டெல்லி பல்கலைக்கழகம் அதிரடியாக உத்தரவிட்டது இந்த உத்தரவின் அடிப்பிடையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் அடுத்த நாளே சிபிஎஸ்இக்கு,மற்றொரு உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
CBSE Vocational Exam Datesheet: தேர்வு அட்டவணை!
அதே போல் தொழில்முறை பாடங்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி இரண்டாவது பாதியில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 10 மற்றும் 12 வகுப்பிற்கான தொழிற்கல்வி தேர்வுகள் இன்று (5.10.18) முதல் தொடங்குகிறது.
12ஆம் வகுப்பில் 40 தொழிற் பாடப்பிரிவுகளும், 10ஆம் வகுப்பில் 15 தொழிற் பாடப்பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன. டைபோகிராபி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வெப் அப்ளிகேஷன்ஸ், கிராபிக்ஸ், ஆபிஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேர்வுகள் வரும் 5 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. மாணவர்கள் இதுக் குறித்து முழு விபரத்தை சிபிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளமானன cbse.nic.in தெரிந்துக் கொள்ளலாம்.
நடப்பு கல்வியாண்டில் முதன்மை தேர்வு முடிவுகளும், மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகளும் முன்பாகவே வெளியாகும். 12ஆம் வகுப்பைப் பொறுத்தவரை கட்டாயப் பாடம் என்பது மொழிப்பாடங்கள் மட்டுமே. ஆனால் 10ஆம் வகுப்பில் மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை அடங்கும். மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப, கட்டாயப் பாடத்துடன் விருப்பப் பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.