Advertisment

CBSE 12th Result 2018: சிபிஎஸ்இ தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று காஸியாபாத் மாணவி சாதனை!

CBSE 12th Result 2018:1800 11 8004 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு உளவியல் ஆலோசனைகளைப் பெறலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE 12th Result 2018: சிபிஎஸ்இ தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று காஸியாபாத் மாணவி சாதனை!

CBSE 12th Result 2018:சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியாகின.

Advertisment

CBSE 12th Result 2018:(சிபிஎஸ்இ) மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை c​bs‌e.‌n‌i​c.‌i‌n அல்லது c​b‌s‌e‌r‌e‌s‌u‌l‌t‌s.‌nic.‌i‌n ஆகிய இணையதள பக்கங்களில் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

CBSE 12th Result 2018:சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

3.30 pm : சிபிஎஸ் தேர்வு முடிவுகள் கடந்த 2017 ஆண்டுன் ஒரு ஒப்பீடு

publive-image

3.00 pm :

2.30 pm : சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ - மாணவியர்களின் விவரங்கள்

publive-image

2.00 pm சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாற்று திறனாளி மாணவன் அகம் தூவ். 90.6% கட் அவுட் மார்கெக் எடுத்துள்ளார்.

publive-image

1.40 pm : 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து காஸியாபாத் மாணவி அனோஷ்கா சந்த் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவரும்,ஆங்கிலத்தில் மட்டும் 98 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை தவறவிட்டுள்ளார்.

1.30 pm : முதலிடம் பிடித்துள்ள மேக்னா ஸ்ரீவத்சவா மாணவி, எல்லா பாடத்திலும் 100 மதிப்பெண்கள் பெற்று ஆங்கிலத்தில் மட்டும் 99 மதிப்பெண் எடுத்துள்ளார்.

1.20 pm : தேர்வு எழுதியதில் 7 பேர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது பிடித்துள்ளனர்.

1.15 pm : கடந்த ஆண்டு 88.37 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு எடுத்திருந்த டெல்லி, இம்முறை சிறிய அளவில் முன்னேறி 89 சதவீதம் தேர்ச்சி விழுக்காடை பெற்றுள்ளது.

1.12 pm : 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று காஸியாபாத் மாணவி மேக்னா ஸ்ரீவத்சவா முதலிடம்.

1.10 pm : டெல்லி 89 சதவீதம் பிடித்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

1.00 pm : சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.87 தேர்ச்சி விகிதம் பெற்று சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது

12.50 pm : சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.32% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்தது.

12.50 pm : சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் சென்னை மண்டலத்தில் 93.87% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12.40 pm : தேர்வு எழுதிய 11.6 லட்சம் மாணவர்களில் 91, 8763 மாணவ - மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

12.35 pm : 2018 ஆம் ஆண்டு சிபிஎஸி தேர்ச்சி விழுக்காடு 83.01 சதவீதம். கடந்தாண்டை விட 1 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ( 82.02 %_)

12.30 pm : c​bs‌e.‌n‌i​c.‌i‌n அல்லது c​b‌s‌e‌r‌e‌s‌u‌l‌t‌s.‌nic.‌i‌n ஆகிய இணையதளத்தில் முடிவுகள் வெளியாகின.

12.00 am: பிஎஸ் இ தேர்வு முடிவுகள் வெளிவரத் தொடங்கின.

11.20 am: உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 78.97 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு. 1.03 மாணவ - மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

11.10 am : மாணவர்கள் தங்களின் டிஜிட்டல் மார்க்‌ஷீட்டை http://digilocker.gov.in. இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

11. am : எஸ் எம் எஸ் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

57766 (BSNL), 5800002 (Aircel), 55456068 (Idea), 54321, 51234 and 5333300 (Tata Teleservices), 54321202 (Airtel), and 9212357123 ஆகிய நம்பர்களுக்கு உங்களின் தேர்வு எண்ணை அனுப்பி எஸ் எம் எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.

10.40 am : உத்தரகண்ட் மாநிலத்தில் இன்னும் சற்று நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகுகின்றன.

10.10 : c​bs‌e.‌n‌i​c.‌i‌n அல்லது c​b‌s‌e‌r‌e‌s‌u‌l‌t‌s.‌nic.‌i‌n ஆகிய இணையதளத்தில் முடிவுகள் வெளியாகுகின்றன.

10.am : தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலிடம் பிடித்தவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

9.40 am : தேர்வு முடிவுகள் 12 மணிக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

9.30 am: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் அனில் ஸ்வரூப் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்ற முடிந்தன. மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதியும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 23 ஆம் தேதியும் வெளியிடப்பட்டன.

இதனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் சுமார் 11.85 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு எழுதினர். இந்தியா முழுவதும் 4,138 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களையும், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதன் இணையதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

c​bs‌e.‌n‌i​c.‌i‌n அல்லது c​b‌s‌e‌r‌e‌s‌u‌l‌t‌s.‌nic.‌i‌n ஆகிய இணையதள பக்கங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்காக உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் செய்துள்ளது.

அதன்படி, 1800 11 8004 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு உளவியல் ஆலோசனைகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment