CBSE Encrypted Question Paper : கடந்த வருடம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வின் போது, கேள்வித் தாள்கள், தேர்வுகளுக்கு முன்பே வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
மேலும் சி.பி.எஸ்.இயின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைத் தன்மை கேள்விக்குறியானது. இந்நிலையில் நேற்று மிக அதிக அளவில் மாற்றங்களையும் விதிமுறைகளையும் அறிவித்தது சி.பி.எஸ்.இ நிர்வாகம்.
குறியாக்கம் செய்யப்பட்ட கேள்வித்தாள் முறையை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற கேள்விக்கு சி.பி.எஸ்.இ நிர்வாக செயலாளர் அனுராக் திருப்பதி பதில் அளித்துள்ளார்.
CBSE Encrypted Question Paper குறித்து அனுராக்கின் பதில்
அதில் "கடந்த வருடம், மிகவும் குறைவான மாணவர்கள் எழுதிய பாடங்களுக்கான கேள்விகள் குறியாக்க முறைப்படி கேட்கப்பட்டிருந்தது. உண்மையான தேர்வுத் தாள்களை வைத்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை உணர்ந்த பின்பு இந்த முடிவினை நாங்கள் கடந்த வருடம் மேற்கொண்டோம். இம்முறையும் அதே போன்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள உள்ளோம்.
ஆனால் குறிப்பிட்ட வினாத்தாள்களுக்கு மட்டுமே. முடிந்தவரையில் ஃபூல் ப்ரூஃப் டெலிவரி சிஸ்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு அம்சங்கள் இந்த ஆண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்படும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க : மறுகூட்டலுக்கு மூன்று படி நிலை முறை ஏன் ?