எழுத்து மற்றும் செயல்முறை தேர்வுகளில் 33 மார்க் எடுத்தால் நீங்கள் 10 வகுப்பு பாஸ்!

2019ம் ஆண்டு சிபிஎஸ்சி தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது…

cbse board exam, coronavirus responsibilities
cbse board exam, coronavirus responsibilities

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முறை மாற்றம் : சிபிஎஸ்சி சிலபஸ் மூலம் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய தேர்ச்சி விகிதம் மற்றும் அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் சிபிஎஸ்சி சேர்மென் அனிதா கார்வால்.

அடுத்த ஆண்டு முதல் 10 வகுப்பு தேர்ச்சி பெற எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் என இரண்டிலும் சேர்த்து 33% மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானதாகும் என தளர்ச்சி அளித்துள்ளது சிபிஎஸ்சி.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்த திட்டம் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் 10ம் வகுப்பு தேர்வில் இருந்து கட்டாயமாகிறது. இதுவரை நடந்த தேர்வுகளில் ஒரு மாணவர் தேர்ச்சியடைய வேண்டுமானால் அவர் இண்டெர்னல் அசெஸ்மெண்ட் மற்றும் பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தேர்ச்சி விகிதம் முடிவு செய்யப்பட்டது. இரண்டிலும் தனித்தனியாக 33% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு வேலை செய்முறை தேர்விலோ அல்லது எழுத்து தேர்விற்கோ வரவில்லை என்றால் அவருடைய மொத்த மதிப்பெண் 0 வாக கணக்கிடப்பட்டது. 2019ம் ஆண்டு சிபிஎஸ்சி தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cbse relaxes class 10 passing criteria

Next Story
திருச்சி விமானம் விபத்து பகீர்: மோதியது தெரியாமல் விமானத்தை இயக்கிச் சென்ற விமானிகள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com