Advertisment

CBSE 2019-20 Curriculum Update: பள்ளிகளில் இனி விளையாட்டு பாடவேளை கட்டாயம் : மாணவர்களின் திறனை மேம்படுத்த சிபிஎஸ்இ புது உத்தி...

Central Board of Secondary Education (CBSE) Curriculum updated for class 1 to 12:மாணவர்களின் உடல்நலம் மற்றும் உடற்திறனை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டத்தில் அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cbse time table, new cbse curriculum

cbse, schools, sports, arts, period, health, social empowerment, சிபிஎஸ்இ, பள்ளி, விளையாட்டு, கலை, உடல்நலம், சமூக மேம்பாடு

Central Board of Secondary Education (CBSE): மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (Central Board of Secondary Education (CBSE)) கீழ் செயல்படும் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தின்படி, 1 முதல் 12 வரையிலான வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வேளைகளில் தினமும் விளையாட்டுக்கு என்று தனியாக பாடவேளை ( period) ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பாடப்பிரிவிற்கு தனியாக எழுத்துமுறை வகுப்பு கிடையாது.

Advertisment

2019 -20 ம் கல்வியாண்டில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தினமும் விளையாட்டு பாடவேளை இருக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல்நலம் மற்றும் உடற்திறனை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டத்தில் அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டத்தில், தனிநபர் மற்றும் குழு செயல்பாடுகள், விளையாட்டு, உடல்நலம் மற்றும் சமூக மேம்பாடு உள்ளிட்டவைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களும் பலன் அடையும் வகையில் அவர்களுக்கு என்று தனியான விளையாட்டுப்போட்டிகள், வீல் சேர் உள்ளிட்ட அம்சங்களை பள்ளியிலேயே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட பாடங்களுடன் யோகா பயிற்சியும் திறன்மிகு பாடத்திட்ட வரிசையில், இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, சிபிஎஸ்இ செய்தித்தொடர்பாளர் ரமா சர்மா தெரிவித்துள்ளதாவது, பள்ளி மாணவர்களின் தினசரி நடவடிக்கைகளில் உடற்திறன் பயிற்சியும் முக்கியமான கருதப்படுகிறது. மாணவர்கள் எந்த விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்களோ, அந்த விளையாட்டு தொடர்பாக புதுப்புது தகவல்கள் , பயிற்சிகள் அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக, சிறப்பு பயிற்சியாளர்களையும் நியமிக்க பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சியாளர் இல்லாதபட்சத்தில், அந்த வகுப்பின் பொறுப்பு அலுவலரே, மாணவர்களின் திறனறிந்து அவர்கள் விரும்பும் உடற்தகுதி பயிற்சிகள் செய்ய அறிவுறுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவின்படி, மாணவர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டை (தடகளம், குழு விளையாட்டு, சாகச விளையாட்டு, தனிநபர் விளையாட்டு, நீச்சல் உள்ளிட்டவைகள் ) தேர்வு செய்துகொள்ள வேண்டும். அந்த ஆண்டு முழுவதும் தங்களுக்கு பிடித்த விளையாட்டை அவர்கள் தெரிவு செய்து மகிழலாம்.

இரண்டாவது பிரிவாக உடல்நலம் மற்றும் உடற்தகுதி

மூன்றாவது பிரிவு - பணி மற்றும் செயல்முறைக்கல்வியின் மூலமாக சமூக மேம்பாடு

நான்காவது பிரிவாக - பதிவேடு பணியாக உடல்நலம் மற்றும் செயல்பாடுகளின் பதிவு தயாரிப்பு

மொத்தமுள்ள 100 மதிப்பெண்களுக்கு முதல் பிரிவிற்கு 50 மதிப்பெண்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளுக்கு தலா 25 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு பாடவேளை போன்று, கலை தொடர்பான கல்விக்காக, வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் கலைக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த கலைக்கல்வி பாடவேளையில், மாணவர்களுக்கு கலை, இசை, விசுவல் ஆர்ட்ஸ், தியேட்டர் உள்ளிட்டவைகள் குறித்து பாடங்கள் பயிற்றுவிக்கப்படும் என்று ராமா சர்மா கூறினார்.

Sports Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment