சிமிஎஸ்சி 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு - சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பு.

இணையதளத்தில் வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் 12ம், 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மறு தேர்வு நடக்கும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பு.

சிபிஎஸ்இ பள்ளிகளின் 10ம் மற்றும் 12ம் வகுப்பு சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்தத் தேர்வு நடைபெற்று வந்த போது ஒரு சில பாடங்களின் வினாத் தாள்கள் இணையதளத்தில் வெளியானது. இவ்விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 10ம் வகுப்பின் கணித பாடக் கேள்விகளும் வாட்ஸ் ஆப் மூலம் வெளிவந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார் மணிஷ் சிசோடியா.

இது தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் மறுப்பு தெரிவித்தது. மேலும் தேர்வினை திசைதிருப்பு சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இவ்வாறு கூறிவந்த நிலையில் 12ம் வகுப்பின் எகனாமிக்ஸ் மற்றும் 10ம் வகுப்பின் கணித பாடத்தின் தேர்வை மீண்டும் நடத்த முடிவெடுத்துள்ளது.

விரைவில் இந்தத் தேர்வு குறித்த தகவல்களை ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் அறிவிக்கும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் கூறியுள்ளது.

×Close
×Close