நெஞ்சை பதற வைக்கும் வீடியோ: உயிர் தப்பிய குழந்தையும், காப்பாற்றிய காவலரும்....

மகாராஷ்ட்ராவில்  ஓடும் ரயில் ஏற முயன்று ரயிலில் சிக்கிய  பெண் குழந்தையை பாதுகாப்பு படைவீரர்  ஒருவர்  கண் இமைக்கும்  நேரத்தில்   காப்பாற்றிய வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் தலைநகரான மும்பையில் உள்ள மகாலக்‌ஷ்மி ரெயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன்  வெளியூறுக்கு செல்ல வந்திருந்தார். அப்போது அவர்கள் வருவதற்குள் ரயில் புறப்பட தொடங்கியது.

உடனே, தம்பதியினர் குழந்தையை கையில் பிடித்துக் கொண்டே  நகரும் ரயில் ஏற முயற்சித்தனர். ஆனால், அதற்குள் ரயில் வேகமக நகர்ந்து விட்டதால்  அந்த சிறுமி தண்டவாளத்திற்கு  கீழே விழும் தருவாயில் செல்கிறார். இதைப் பார்த்த பாதுகாப்பு படைவீரர் ஒருவர் வேகமாக ஓடிச் சென்று அந்த குழந்தையை  காப்பாற்றினார்.

 

 

இந்த காட்சிகள்  அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகினர். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உயிரை பண்யம் வைத்து குழந்தையை காப்பாற்றிய  பாதுகாப்பு படைவீரர் சச்சினுக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டரில் ‘சச்சின் சிறுமியை காப்பாற்றிய வீடியோவை பதிவு செய்துள்ளார். மேலும், அதனுடன் மகாராஷ்டிரா பாதுகாப்பு படை வீரர் சச்சினின் தைரியத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். அவர் சமயோசித சிந்தனையுடன் சிறுமியை காப்பாற்றினார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

×Close
×Close