மும்பையில் உயிரை பணயம் வைத்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர், பயணியின் உயிரை காப்பாற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரயில் பெட்டிக்கும் நடைமேடை தளத்திற்கு இடையிலான இடைவெளியில் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் மரணத்தில் முடிய கூடியவை. ஆனால் மும்பையில் கண் நொடிக்கும் நேரத்தில் பயணி ஒருவர் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். பயணியை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரயில்வே கான்ஸ்டபிள் வினோத் சிண்டேக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடந்த ஜூலை 14 ஆம் தேதி மும்பை பன்வேல் ரயில் நிலையத்தில், வேகமாக சென்றுக்கொண்டிருந்த ரயிலில் பயணி ஏற முயன்றபோது, கை நழுவியாதல், கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மேல் ரயிலுடன் சேர்த்து இழுத்துச் செல்லப்பட்டார். அப்பொழுது அங்கிருந்த ரயில்வே கான்ஸ்டபிள் வினோத் சிண்டே, ஆபத்தில் இருக்கும், அந்த நபரை காப்பாற்ற, அவர் மீது பாய்ந்து காப்பாற்றினார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.