பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: மோசமான வானிலையே காரணம்…வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹெலிகாப்டர் Controlled Flight into Terrain (CIFT) காரணமாக , நிலப்பரப்பில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், ஜனவரியில் விமானப்படைத் தளபதியிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தகவல் தெரிவித்தனர்.

இருப்பினும், இதுவரை ஹெலிகாப்டர் விபத்து விசாரணை அறிக்கை குறித்து விமான படை சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த விபத்தானது மனித தவறுனாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ ஏற்படவில்லை. Controlled Flight into Terrain (CIFT) காரணமாக , நிலப்பரப்பில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CIFT என்பது ஹெலிகாப்டர் பறப்பதற்கு முழு தகுதியுடைய நிலையாகும். அதே சமயம், விமானியும் தவறு செய்யவில்லை. இதில், விபத்து நடந்த குன்னூர் பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வைத்திறன் குறைந்ததில் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. உலகளவில் விமான விபத்துக்களுக்கு CIFT முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இறுதி அறிக்கையின் மூலம் விபத்து குறித்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வரும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை மேற்கொண்டது. விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன், ஆய்வில் அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த, கண்டுபிடிப்புகள் சட்டப்பூர்வமாக சரிபார்க்கப்படும்.

விபத்து நடந்த உடனே ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மற்றும் “காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்” ஆகியவை கண்டு எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

குன்னூரின் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த மாதம் 8-ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

டிசம்பர் 9 ஆம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டர் சூலூர் விமான தளத்தில் இருந்து காலை 11.48 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு வெலிங்டனில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால் சூலூர் விமான தளத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டகம், மதியம் 12.08 மணியளவில் ஹெலிகாப்டருடனான தொடர்பை இழந்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cds chopper crash unintentional error likely cause

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express