தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா

அவருடைய ராஜினாமா என்னை மிகவும் வருத்தப்பட வைக்கின்றது என்று அருண் ஜெட்லி முகநூலில் உருக்கம்.

ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின்பு, பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். தன்னுடைய குடும்ப சூழல் காரணமாக அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு  அக்டோபர்  16ம் தேதி அப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட அரவிந்த் சுப்பிரமணியனின் பணிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. கடந்த அக்டோபர் மாதமே அவருடைய பணி காலம் முடிவிற்கு வந்த நிலையில், அருண் ஜெட்லியின் வேண்டுகோளிற்கு இணங்க மேலும் ஒரு வருடம் அப்பொறுப்பில் இருப்பதாக அறிவித்திருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, வீடியோ கால் மூலமாக அருண் ஜெட்லியை தொடர்பு கொண்ட அரவிந்த் சுப்ரமணியன் தன்னுடைய குடும்ப சூழல் காரணமாக அவர் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இனி இவ்வேலையினை தொடர இயலாது என்பதனையும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய ராஜினாமாவினைத் தொடர்ந்து அரவிந்த் பற்றி பெருமிதமாகவும், அவருடைய ராஜினாமா பெரும் கவலையை அளிப்பதாகவும் முகநூலில் உருக்கமான கடிதம் ஒன்றை பதிவிட்டிருக்கின்றார் அருண் ஜெட்லி.

59 வயதான அரவிந்த் சுப்ரமணியன் டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்றவர். பின்பு மேலாண்மை படிப்பினை அஹமதாபாத் ஐஐடியில் முடித்தார். இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close