இந்த உலகத்தில் அதி பயங்கரமான பதற்றம் மிக்க எல்லை எதுவாக இருக்குமென்றால் ஒன்று பாலஸ்தீன் - இஸ்ரேல் எல்லையும், மற்றொன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லையும் தான்.
புனித இரமலான் மாதத்தினை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ ஜெனரல்கள் 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடவடிக்கை அனைவருக்கும் வருத்தத்தினை அளித்திருக்கின்றது.
அமைதிப் பேச்சு வார்த்தைக்கு திரும்பி, போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்து, இந்த இரமலானை அமைதியாக கொண்டாட எத்தனை முயற்சி செய்தாலும் இறுதியில் அது பிரச்சனையில் தான் முடிந்திருக்கின்றது.
இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையின் அருகில் இருக்கும் ராம்கர் பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு இந்திய இராணுவ அதிகாரிகள் நான்கு பேரை பாகிஸ்தான் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் எல்லைப்பகுதியில் பதட்டம் மிக்க சூழ் நிலை காணப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் பகுதி, ராஜ்ஜோரியில் இருக்கும் எல்லைப்பகுதியான நவ்ஷேராவில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மணிப்பூரை சேர்ந்த விகாஸ் குராங் என்ற இராணுவ வீரர் இன்று காலையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இராணுவ அதிகாரிகள் தகவல் தெரித்துள்ளனர்.
இரமலான் மாதத்தினை முன்னிட்டு மத்திய அரசு காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து ஷ்மீர் பகுதியில் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. மே 16ம் தேதியில் இருந்து காஷ்மீரில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. இந்த மத்திய அரசின் நடவடிக்கைகளை காஷ்மீர் மாநில மக்கள் அனைவரும் வரவேற்றினார்கள். பிரிவினைவாதிகளிடம் இது குறித்து பேச மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அமர்நாத் கோவிலிற்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படாத வகையில் இந்த போர் நிறுத்த நடவடிக்கைகள் மேலும் சில நாட்களுக்கு மட்டுமே தொடங்கும் என்றும், எந்தக்காரணம் கொண்டும் இராணுவ வீரர்களின் கையை இனி கட்டிப் போட்டுவிட இயலாது என்றும் இராணுவ அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.