பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிச.28) சனிக்கிழமை அயோத்தி நகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக
மாற்றும் வாக்குறுதியுடன் பல திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிதாக கட்டப்பட்ட வால்மீகி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தையும் தொடங்கி வைத்தார். இதையடுத்து ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறப்பு நாளில் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் ராம் ஜோதி ஏற்றியும் , அந்த நாளை தீபாவளியாக கொண்டாட வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.
அயோத்தியில் ரோட் ஷோ நடத்தி பேரணியில் உரையாற்றிய மோடி, “உலகம் முழுவதும் உள்ள மக்கள் வரலாற்று தருணத்திற்காக காத்திருக்கிறார்கள். நாட்டின் 140 கோடி மக்களும் ராம்லல்லாவின் சிலை கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி, தங்கள் வீட்டில் ராம ஜோதி ஏற்றி, தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜனவரி 22 அன்று மாலையில் நாடு முழுவதும் விளக்குகளால் ஜொலிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
தன்னை "பூஜாரி" (பக்தர்) என்று அழைத்துக் கொண்ட பிரதமர் அனைவரையும் போலவே ஜனவரி 22-ம் தேதி நாளுக்காக தானும் உற்சாகமாக காத்திருப்பதாக கூறினார்.
/indian-express-tamil/media/media_files/XwKwCzUlHTyiEKKOUlOI.webp)
அதே நேரத்தில், ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். "550 ஆண்டுகளாக காத்திருக்கும்" "ராமபக்தர்கள்" அவர்களின் வசதிக்கேற்ப பின்னர் வர வேண்டும், ஏனெனில் "இந்த முறை அயோத்தில் உள்ள நவ்யா, பவ்யா, திவ்யா (புதிய, பிரமாண்டமான, தெய்வீக) கோயில் எங்கும் செல்லாது, பல நூற்றாண்டுகளாக 'தரிசனம்' கிடைக்கும் என்றார்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வரும் மகர சங்கராந்தி அன்றே நாட்டில் உள்ள யாத்ரீக ஸ்தலங்களில் தூய்மை பணிகளை தொடங்கி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
"ஜனவரி 14, மகர சங்கராந்தி நாளிலிருந்து, நாடு முழுவதும் பெரிய மற்றும் சிறிய யாத்திரை ஸ்தலங்கள், தூய்மை இயக்கத்தை தொடங்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
/indian-express-tamil/media/media_files/ibDb1uVmY6lqqMwMHHaI.webp)
அயோத்தி வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், நகரத்தின் வளர்ச்சிக்கு எந்தக் கல்லையும் விட்டு வைக்க மாட்டோம் என்று மக்களுக்கு உறுதியளித்தார்.
கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என்றார். இதை மனதில் வைத்து தனது அரசு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்றார். "அயோத்தி கோ ஸ்மார்ட் பனா ரஹி ஹை (அயோத்தி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படுகிறது)." என்றார்.
"பாரம்பரியம்" மற்றும் "வளர்ச்சி" ஆகியவற்றை ஒன்றிணைத்து எடுத்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து, நவீன பாரதத்தில், அயோத்தி தாமின் புதிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் உலகை ராமர் கோயிலுடன் இணைக்கும் என்று மோடி கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், அயோத்தியில் புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலை வாய்ப்புகளை வழங்கும் என்றார். இதன் மூலம், டாக்சி, ரிக்ஷா ஓட்டுபவர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், தாபா உரிமையாளர்கள், பூக்கள் அல்லது பிரசாதம், பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் வருமானம் உயரும்.
/indian-express-tamil/media/media_files/4YZjS5BXa2oSn4b5Yvuu.webp)
ஒரு காலத்தில் ராம்லல்லா கூடாரத்தில் வசித்து வந்தார், ஆனால் இப்போது அவருக்கு ஒரு நிரந்தர வீடு இருக்கும் என்று அவர் கூட்டத்தில் கூறினார்.
பெரிய பாய்ச்சலுக்குத் தயாராக இருக்குமாறு அயோத்தி மக்களைக் கேட்டுக் கொண்ட பிரதமர், “மக்கள் லட்சக்கணக்கில் வரப் போகிறார்கள்... இந்தப் போக்கு முடிவற்றதாக, காலமற்றதாக இருக்கும்,” என்றார்.
“மோடியின் உத்தரவாதத்தின்” வலிமைக்கு அயோத்திதான் ஆதாரம் என்று கூறிய அவர், “இந்த நாட்களில் மோடி கி கியாரண்டியில் ஏன் பலம் இருக்கிறது என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். மோடி தான் உத்தரவாதம் அளித்ததை வழங்குகிறார், அதற்காக இரவு பகலாக உழைக்கிறார் என்றார்.
/indian-express-tamil/media/media_files/FnE6a0evnCoH01AgzirY.webp)
அயோத்தியில் ரூ.15,700 கோடி மதிப்பிலான 46 திட்டங்களை அவர் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். முன்னதாக, அயோத்தி வந்த மோடியை ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/celebrate-diwali-january-22-ram-temple-ceremony-pm-modi-ayodhya-9088953/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“