சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினம் : பல்கலைக்கழக மானியக் குழு இந்தியாவில் இருக்கும் உயர் கல்விநிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் வருகின்ற 29ம் தேதி, மாணவர்கள் அனைவரும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினத்தினை கொண்டாடவும், இந்திய ராணுவ வீரர்களுக்கு தங்களின் ஆதரவினை தரும் விதமாக உறுதிமொழி மற்றும் கடிதங்களை டிஜிட்டல் மற்றும் கடித போக்குவரத்து வழியாக அனுப்ப வேண்டியும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினம் - பல்கலைக்கழகங்களுக்கு கடிதம்
இந்தியாவில் இருக்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களையும் தொடர்பு கொண்டு பேசிய யூஜிசி “கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் இருக்கும் என்.சி.சி அமைப்பு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினத்தினை நினைவு கூறும்படி ஒரு அணி வகுப்பினை நிகழ்த்த வேண்டும் என்றும், முன்னாள் ராணுவ வீரர்களை அழைத்து வந்து உரை நிகழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க : சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் வீடியோ
செப்டம்பர் 29ம் தேதி இந்தியா கேட் பகுதியில் கண்காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும், நகரங்களிலும் கண்காட்சிகள் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
2016ம் ஆண்டு இந்திய ராணுவம், சர்வதேச எல்லையை கடந்து பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாமினை அழித்ததை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று இந்திய அரசு கூறிவருகிறது. மிக சமீபத்தில் இது தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.