காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் பெங்களூருவில் போராட்டம் நடத்திவருகின்றன.
இந்தப் போராட்டம் காரணமாக நகரின் முக்கியப் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.30) நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கன்னட விவசாயிகளுக்கு ஆதரவாக சாண்டல்வுட் திரை நட்சத்திரங்கள் நடிகர்கள் ஷிவ் ராஜ்குமார், தர்ஷன், துருவா சர்ஜா, பூஜா காந்தி, துனியா விஜய் உள்ளிட்ட பலர் குருராஜ் மாநாட்டு மையத்தில் ஒன்று கூடினார்கள்.
அப்போது, நேற்று பெங்களூருவில் தனது தமிழ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேற வற்புறுத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் சித்தார்த்திடம் நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
Sandalwood comes out in support of Karnataka Bandh
மேலும், “காவிரி எங்கள் சொத்து” என சிவ ராஜ் குமார் பேசியதாக கூறப்படுகிறது. சிவராஜ்குமார் அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அவர் பேசியபோது கன்னட விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர்கள் தர்ஷன், துருவா சர்ஜா, பூஜா காந்தி, துனியா விஜய் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இந்த நிலையில், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், "கர்நாடக பந்த் முற்றிலும் அமைதியானது. மக்கள் அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். அனைவருக்கும் முழு பாதுகாப்பு அளித்துள்ளோம்.
உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாததால் பந்த் நடத்த வேண்டாம் என்று நிறுவனங்களை கேட்டுக் கொண்டோம். மேலும், பெங்களூருவும், கர்நாடகாவும் பாதுகாப்பாக உள்ளன. மதியம் மீட்டிங் இருக்கிறது. இதில், பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்போம்” என்றார்.
கர்நாடக பந்த் காரணமாக வாடிக்கையாளர்கள் இல்லாததால் கேஆர் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், வியாபாரிகளின் அப்பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் உள்ளிட்ட கேம் விளையாடி மகிழ்ந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“