மிகவும் தாமதமான மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு நடத்தவும், 2026-ம் ஆண்டிற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறையை முடிக்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது. வட்டாரங்கள் கூறுகையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்குமா என்பது குறித்த பரிந்துரைகள் எடுக்கப்படுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: Census next year, delimitation soon after, as Govt plans for next LS polls with new seats
மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தொகுதிகளை மறுவடிவமைப்பதற்காக, தொகுதி மறுவரையறை நிர்ணயத்தை அரசு மேற்கொள்ளும். இதைத் தொடர்ந்து மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு நடைமுறைகளும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
2002-ம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அப்போதைய என்.டி.ஏ அரசாங்கம் 84-வது திருத்தத்தின் மூலம் தொகுதி மறுவரையறை நிர்ணயத்தை 25 ஆண்டுகள் தாமதப்படுத்தியது. இது 2026-ம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பின்னரே" மேற்கொள்ளப்படும் என்று கூறியது. இதன் பொருள் தொகுதி மறுவரையறை நிர்ணயம் 2031 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு மேற்கொள்ளப்படும். இருப்பினும், வட்டாரங்கள் கூறுகையில், தொகுதி மறுவரையறை நிர்ணய செயல்முறையை 2027-க்குள் தொடங்கி ஒரு வருடத்திற்குள் முடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, இதனால், அடுத்த மக்களவைத் தேர்தலை (2029-ல்) எல்லை நிர்ணயத்திற்குப் பிறகும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா செயல்படுத்தப்பட்ட பிறகும் செய்ய முடியும்.
சமீபத்தில், இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக மிருத்யுஞ்ஜெய் குமார் நாராயணின் பதவிக்காலம் இந்த டிசம்பரைத் தாண்டி ஆகஸ்ட் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்க்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தாலும் - காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் ஜே.டி (யு), லோக் ஜனசக்தி கட்சி மற்றும் அப்னா தளம் போன்ற சில ஆளும் என்.டி.ஏ. அதற்கான சூத்திரத்தை இறுதி செய்ய வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பா.ஜ.க-வின் சித்தாந்த தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு யோசனையை ஆதரித்துள்ளது, சரியான எண்ணிக்கையைப் பெறுவது நன்கு நிறுவப்பட்ட நடைமுறையாகும் என்று கூறியது.
ஆனால், அதை எப்படிச் செய்வது என்பது குறித்த தெளிவு இல்லை என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. “தற்போதுள்ள பட்டியல் சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் மதத்தின் எண்ணிக்கையில் ஓ.பி.சி பிரிவைச் சேர்ப்பது மற்றும் பொது மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்குள் உள்ள துணைப்பிரிவுகளின் கணக்கெடுப்பு உள்ளிட்ட பரிந்துரைகள் உள்ளன.
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் காரணமாக வடக்கில் இருந்து அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இருக்கும் நாடாளுமன்றத்தில் அதன் அரசியல் பங்கின் தாக்கம் குறித்து தென் மாநிலங்கள் கவலைப்படுவதால், தொகுதி மறுவரையறை நிர்ணயம் அதன் சொந்த பிரச்சனைகளைக் கொண்டிருக்கும். தெற்கில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் இந்த கவலையை பகிரங்கமாக எழுப்பியுள்ளன, ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும், பா.ஜ.க-வின் முக்கிய கூட்டணி கட்சியுமான தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி)-யின் தலைவரும், வயதான மக்கள்தொகையின் விளைவுகளை ஈடுசெய்ய அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மாநிலத்தில் உள்ள மக்களை ஊக்குவிக்கின்றனர்.
அரசு வட்டாரங்கள் இந்த கவலையை அறிந்திருப்பதாகவும், "மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் பிற சமூக முன்னேற்றங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" கண்ட தென் மாநிலங்களை "பாதிக்கக்கூடிய" எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளன.
இது குறித்து மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறை நிர்ணய செயல்முறை வடக்கு மற்றும் தெற்கு இடையே எந்த பிரிவினையையும் ஏற்படுத்தக் கூடாது என பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார். மக்கள்தொகை - பகுதி சூத்திரங்களை நன்றாகச் சரிசெய்வது அல்லது மாற்றுவது உதவக்கூடும். அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒருமித்த கருத்து வெளிவரும்” என்றார்.
தொகுதி மறுவரையறை எல்லை நிர்ணய செயல்முறைக்கு தேவையான திருத்தங்களில், பிரிவு 81 (இது மக்களவையின் அமைப்பை வரையறுக்கிறது), பிரிவு 170 (சட்டமன்றங்களின் அமைப்பு), பிரிவு 82, பிரிவு 55 (ஒவ்வொரு வாக்கின் மதிப்புக்கான குடியரசுத் தலைவர் தேர்தல் செயல்முறையைப் பற்றியது. தேர்தல் நடவடிககி மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது), பிரிவுகள் 330 மற்றும் 332 (முறையே மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கான இட ஒதுக்கீட்டை உள்ளடக்கியது).
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.