குடியுரிமை சட்ட திருத்தம் (2019), மற்றும் முத்தலாக் தடை மசோதா (2018) மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.
அதோடு ”இந்திய விமானப்படை மூலதனக் கையகப்படுத்தல்" மீதான செயல்திறன் தணிக்கை அறிக்கையும் இன்று மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பா.ஜ.க கட்சியின் மேல் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ’ரபேல்’ ஒப்பந்தத்தின் மீதான இந்த சி.ஏ.ஜி அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
ஆலோசிக்காமல் குடியுரிமை திருத்த சட்டத்தை தாக்கல் செய்வதாக எதிர்கட்சிகள் போராட்டத்தில் இறங்கினார். இதற்கு, 2016-ல் 3 மணி நேரம் ஒதுக்கி தான் இந்த மசோதா உருவாக்கப்பட்டதாக மேற்கோளிடப்பட்டது.
குடியுரிமை மற்றும் முத்தலாக் தடை சட்டம் இரண்டுமே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் தீவிரமாகியுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இந்து, சீக்கியர், புத்த, ஜெயின், பார்ஸி, மற்றும் கிறிஸ்தவ மதத்தினர், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
தவிர, முத்தலாக் தடை சட்டத்தின் படி, ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவன் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க முடியும்.